ஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை

அடக்குமுறை! அடக்குமுறை! தமிழ்நாடெங்கும் காவல்துறை ஆட்சி நடைபெறுகிறது.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! 14 பேர் பலி. தொடர்ச்சியாகப் போராடியவர்கள் மீது நூற்றுக்கணக்கில் பொய் வழக்குகள்! கைது! சிறை! பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூட காவல்துறை அனுமதிப்பதில்லை. சென்னை முதல் சேலம் வரை எட்டு வழிச்சாலை போட நில உரிமையாளர்களின் மறுப்பையும் மீறி காவல்துறை குவிக்கப்பட்டு, நிலம் அளக்கப்பட்டு, அதிகாரிகளால் கல் ஊன்றப்படுகிறது. எதிர்க்கும் விவசாயிகள் கைது செய்யப்படுவதோடு, ஆதரவு தெரிவிக்கச் செல்லும் அரசியல் அமைப்பினரும் கைது செய்யப்படுகின்றனர். நெருக்கடியான அடக்குமுறைச் சூழலை எதிர்கொள்ள வேண்டியது அவசியமானது. தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆகஸ்ட் 1 அன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம்! சனநாயகம் காக்க சென்னை நோக்கி அணிதிரள்வீர்!
– மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051