திமுக அரசே! இறையூர் வேங்கைவயலில் பட்டியலின சாதி மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சாதி வெறியர்களைக் கண்டுபிடித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்! கடந்த ஓராண்டில் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் பற்றி உயரதிகார நீதி விசாரணை நடத்துக!
தமிழக மக்களே! சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடுக!
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் கிராமம் வேங்கைவயல் தெருவில் பட்டியலின சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்கவெறியினர் மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச...