மெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
நாட்டின் நான்காவது பெரிய உயர்நீதிமன்றமான மூத்த நீதிமன்றங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பணிபுரிகின்ற இந்திய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிலேயே அதிக அனுபவம் வாய்ந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி அவர்களை நாட்டின் சிறிய நீதிமன்றமான மேகாலயா நீதிமன்றத்திற்கு பணி இடமாற்றம் செய்தும், அவரை விட பல...