அமித் ஷா கூறுவது பொய்; பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாதோர் எண்ணிக்கை 23 % இருந்து 3.7 % ஆக குறையவில்லை!
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் சமர்பித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மசோதாவை நியாயப்படுத்துவதற்கு பல புள்ளி விவரங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அதில் சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மக்கள் தொகை 23 விழுக்காடு...