இந்துத்துவ பாசிச மோடி அரசின் ஏகாதிபத்திய நலனுக்கான தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!! இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 14-08-2020
நடுவண் ஆட்சியில் அமர்ந்துள்ள இந்துத்துவப் பாசிஸ்டுகள் பொதுமுடக்க காலத்தில் தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வித் துறையிலும் அமல்படுத்த தொடங்கிவிட்டார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடி அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம்...