ஆரணி கவுதமன் சாதி ஆணவக்கொலை – மகளை மட்டுமல்ல, மகனையும் கொல்லும் சாதிவெறி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆவூர் பகுதியில் வசித்துவரும் பட்டியல் சாதியை சேர்ந்த அமுல் (29) நர்சிங் டிப்ளமோ முடித்தவர். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்துள்ளார். கும்மிடிப்பூண்டி, ஆரணி அருகே காரணியைச் சேர்ந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இளைஞர் கவுதமன்...