தொழிலாளர் சட்டங்கள் நீக்கத்தை அனுமதியோம் ! தடையற்ற உழைப்பு சுரண்டலுக்கு முடிவுகட்டுவோம்!
பல தலைமுறை கால தொழிலாளர் போராட்டங்களால் பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை தற்போதைய பெருந்தொற்றுநோய் நெருக்கடியை காரணமாக காட்டி, நீர்த்துப்போகச்செய்யவும்/ இடைநீக்கம் செய்யவும் பல்வேறு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை சாத்தியுமுள்ள அனைத்து கடுமையான சொற்களாலும் மாசா கண்டிக்கிறது. அனைத்து நிறுவனங்களுக்கும்,...