அசாம் போராட்டம் – சமூக செயல்பாட்டாளர் அகில் கோகாய் கைது! திருத்தப்பட்ட UAPA சட்டத்தின் மூலம் பயங்கரவாதி என முத்திரை குத்தியது தேசிய புலனாய்வு அமைப்பு NIA

குடியுரிமை சட்டத் குடியுரிமை திருத்தத்திற்கு CAA எதிராக அசாமில் போராட்டம் நடத்தியதற்காக, சமூக செயல்பாட்டாளர் அகில் கோகாயை தேசிய புலானாய்வு அமைப்பு NIA கைது செய்துள்ளது. மேலும் அவர் மீது ஆள்தூக்கி UAPA (சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தை பிரயோகித்து சிறையிலடைக்கவும் மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. நாடாளுமன்றத்தில் UAPA சட்டத்தித் திருத்தம் மேற்கொண்டபிறகு நாட்டில் மேற்கொள்ளப்படுகிற முதல் கைது முயற்சி நடவடிக்கையாகும்.
UAPA சட்டத் திருத்தத்தின்படி நாட்டின் எந்தவொரு தனி நபரையும் “தீவிரவாதி” என முத்திரை குத்தி சிறையில் அடைக்க முடியும்.தான் தீவிரவாதி இல்லை என மறுப்பதற்கு குற்றம்சாட்டப்பட்ட தனி நபருக்கு எந்த வாய்ப்பும் இல்லை.
அகில் கோகாய்,தகவல் அறியும் உரிமைச் சட்ட செயல்பாட்டாளாராகவும் கிசான் முக்தி சங்கரம் சமிதி என்ற விவசாய சங்கத்திற்கு ஆலோசகராகவும் உள்ளார்.குடியிரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக அசாமில் ஜோர்ஹத் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தை முன்வைத்து, “தேசத்திற்கு எதிராக போர்தொடுத்தல்” என குற்றம்சாட்டப்பட்டு கோகாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக அசாமே பற்றி எரிகிற நிலையில்,போராட்டத்தை ஒடுக்குவதற்கு சட்ட ஒழுங்கு ஆணையராக(ADG) G.P சிங் புதிதாக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.இவர் தேசிய புலனாவு மையத்தில் ஆறு ஆண்டுகாலம் பணியாற்றியவர்.அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் சுமார் 18 ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் உடையவர்.
தற்போது இவர் அசாமில் பொறுப்பேற்றவுடன்,போராட்டத்தை போலீசின் சட்டப்பூர்வ வன்முறையை பயன்படுத்தி ஒடுக்க முயல்வது கண்கூடாக தெரிகிறது.அதன் ஒரு பகுதியாகவே கோகையின் கைது நடவடிக்கை அமைந்துள்ளது.
அரசுக்கு எதிராக சிவில் சமூகத்தின் போராட்டம் தீவிரமாகிற நிலையில்,அரசோ போலீஸ் வன்முறையில் புகலிடம் தேடுகிறது.போராட்டத்தை மூர்கமாக ஒடுக்குகிறது.போராட்டக்காரர்களை தீவிரவாதி என்கிறது.
தற்போது தீவிரவாதி என மத்திய அரசால் முத்திரை குத்த முயற்சிக்கப்படுகிற கோகாய் யார்?
- அசாமில் கோலாகட் மாவட்டத்தில் அங்காடி பொது விநியோகத்தில் நடைபெற்ற ஊழலை(2005 ஆண்டில்) முதல் முறையாக அம்பலப்படுத்தியவர்.
- 2008 ஆம் ஆண்டில் ஊழலுக்கு எதிரான சிறந்த செயல்பாட்டாளாராக சண்முகம் மஞ்சநாத் விருது பெற்றவர்.
- குவஹாத்தி மலையில் வசிக்கும் மக்களை அம்மாநில அரசு வெளியேற்ற முனைந்ததற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதால் 2011 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டவர்.
- 2009, அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அனைகட்டுமானத் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டவர்.
ஆங்கிலம் வழி தமிழில்-அருண் நெடுஞ்செழியன்
ஆதாரம்:
https://theprint.in/india/nia-arrests-rti-activist-akhil-gogoi-amid-assam-unrest-charges-him-under-amended-uapa/335484/?fbclid=IwAR1-Et5AQFE7kbbrW_pICgp1RM2tX_pda0pZwJzsLl7bWuwHoaG6TlbuaSw