தொழிலாளர் வர்கத்தின் இன்றையநிலை என்ன ? – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி
நாம் மிகவும் நெருக்கடியான சூழலில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார நெருக்கடியை நாம் கண்கூடாக பார்க்கிறோம். நெடுநாளாகவே, அதிலும் குறிப்பாக 2008 பொருளாதார நெருக்கடிக்கு பின்னர், முதலாளிகளின் இலாப விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதைத் தான் எல்லா குறிகாட்டிகளும் நமக்கு...