ஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்….முன்னேற்றக் கழகங்களிடம் இருந்து மக்களின் கைக்கு அரசியல் மாறும் ஊழியைத் தொடங்கி வைத்த தீப்பொறி – முத்துக்குமார்!
இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடக்கும் இன அழிப்புப் போரைத் தமிழகம் பொருட்படுத்தாது என்றுதான் கலைஞரும் ஜெயலலிதாவும் சோனியாவும் சிதம்பரமும் பிரணாப் முகர்ஜியும் எம்.கே.நாராயணனும் சிவசங்கர மேனனும் எண்ணியிருந்தனர். இணைய ஊழியில் இன உணர்வுக்கு இடமில்லை என்றிருந்தனர். இனத்துக்காக, மொழிக்காக உயிரைக்...