கம்யூனிஸ்ட்கள் முரணற்ற சனநாயகத்திற்கு நிற்க வேண்டும்! தோழர் முத்தரசனின் பொன்பரப்பி ஆர்ப்பாட்ட உரை மீதான விமர்சனம்
ஏப்ரல் 24 அன்று சென்னையில் பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனின் உரை விமர்சனத்திற்கு உரியது. அவ்வுரையில் வாக்களிக்க விடாமல் தலித் மக்களை தடுத்தது சனநாயக மறுப்பு...