பள்ளிக் கல்வி மீதான தமிழ்நாடு மாநில அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விக் கொள்கை மீதான பேராசிரியர் எல். ஜவஹர் நேசனின் பத்திரிகை அறிக்கை
பெரும் எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் நடுவே, தமிழக அரசால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025 – பள்ளிக் கல்வியை மட்டும் கணக்கில் கொண்டதாக, முழுமைபெறாததாக வெளியிடப்பட்டிருக்கிறது.. உள்ளடக்கத்திலும், கட்டமைப்பிலும் மிகக் குறைந்த தரத்தோடு ஒரு கொள்கை அறிக்கை...