‘டிரம்ப்புக்கும் இலான் மஸ்க்கிற்கும் இடையிலான பிளவு’ – பாஸ்கர்

மோடியை அதானி இந்தியாவின் பிரதமர் ஆக்கியது போன்று டிரம்ப்பை இலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதியாக ஆக்கினார்.
ஜனநாயக கட்சியின் ஆதரவாளராக இருந்த இலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புதான் டிரம்ப்பின் ஆதரவாளராக அணி தாவி பல கோடி (250-300 மில்லியன்) டாலர்களை டிரம்ப்பின் வெற்றிக்கு செலவழித்தார்.
ஆனால் அண்மையில் இவ்விருவருக்கும் உரசல் ஏற்பட்டு அது விரிசலாகி பிளவுக்கு சென்றுவிட்டது. அத்துடன் மஸ்க் தனிக்கட்சியை தொடங்கிவிட்டார்.
பின்னர் இருவரும் ஒருவரையொருவர் அம்பலப்படுத்த தொடங்கி எதிர்க்கத் தொடங்கிவிட்டனர்.
டிரம்ப்பின் கடந்தகால பாலியல் விவகாரத்தை மஸ்க் பேச
டிரம்ப்போ தன்னுடைய தற்போதைய ஆட்சியில் மஸ்க் பெற்ற ஒப்பந்தங்களை பேசியதுடன் அவரை நாடு கடத்துவது பற்றியும் பேசி பதிலடி கொடுத்தார்.
டிரம்ப்பிடமிருந்து மஸ்க் பிரிவதற்கான முக்கிய காரணம் என்னவெனில் அரசாங்கம் மின்சார வாகன உற்பத்திக்கு ஏற்கனவே வழங்கிவந்த மானியங்களை ரத்து செய்யும் சட்டமுன் வடிவை டிரம்ப் கொண்டு வந்ததே.
அத்துடன் மஸ்க் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாத மேலதிக திறந்தவெளி பொருளாதாரக் கொள்கையை முன்வைக்கிறார். அதுதான் அமெரிக்காவின் இன்றைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் என்று எண்ணுகிறார்.
அவர் தலைமையிலான ‘டோஜ்'(DOGE – Department of Government Efficiency) FBI உள்ளிட்டு(சிஐஏ தவிர) பல துறைகளில் இலட்சக்கணக்கானோரை பணி நீக்கம் செய்தது இதன் அங்கமே.
மேற்காண் சட்ட முன்வடிவு கொண்டு வரப்படுவதற்கு பின்புலமாக எண்ணெய் மற்றும் ஆட்டோமொபைல் ஏகபோகங்கள்(monopolies) இருக்கின்றன.
இந்த எண்ணெய் ஏகபோக நிறுவனங்கள்தான் ஈராக், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்களுக்கு காரணம்; மே. ஆசியா/அரபு நாடுகளில் பல பத்தாண்டுகால சிக்கல்கள் நிலவிவருவதற்கும் காரணம்.
மற்றோரு புறத்திலோ
மின்சார வாகன உற்பத்திக்கான அரியவகை கனிமங்கள் சீனாவிலும் ஏனைய நாடுகளில் அதன் கட்டுப்பாட்டிலுமே இருக்கின்றன.
இன்னொரு புறத்திலோ அமெரிக்காவானது இன்றைய சூழலில் இரஷ்யாவை எதிர்கொள்வதற்கு அதன் எண்ணெய் ஏகபோகங்களால் மட்டும் முதன்மையாக சாத்தியம்.
ஏனென்றால் இரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியினை மட்டுமே முதன்மையாக(அடுத்ததாக வரிசைப்படி ஏற்றுமதிக்கான இராணுவத் தளவாடம், அணு மின் ஈனுலைகள்) சார்ந்து பொருளாதாரத்தை கட்டியமைத்துள்ளது. அதன் எண்ணெய் முதன்மையாக இன்று இந்தியா, சீனா ஆகியவற்றுக்கும் எரிவாயுவோ ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
ஆட்டம் கண்டுள்ள அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் இரஷ்யா, சீனா ஆகியவற்றுடனான போட்டியை எதிர்கொள்வதற்கு
அமெரிக்க எண்ணெய்/ஆட்டோமொபைல் ஏகபோகங்களால் மட்டுமே சாத்தியம்.
சிறிது காலம் கழித்து வலுவடையப்போகும் மின்சார வாகனம், செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள் தகவல் தொடர்புபேசிகள்(satcoms), விண்வெளி போக்குவரத்து ஆகிய துறைகளில் இன்றுதான் இலான் மஸ்க் பெரியளவில் கால் பதிக்கத் தொடங்குகிறார்.
ஏற்கனவே வலுவாக உள்ள எண்ணெய், எரிவாயு மற்றும் ஆட்டோமொபைல் ஏகபோகங்களும் இன்றைய புதிய எதிரியும் எதிர்கால பெரிய எதிரியுமான இலான் மஸ்க்கை வீழ்த்தும் முகமாகவே மேற்காண் சட்ட முன்வடிவை கொண்டு வந்துள்ளன.
அத்துடன் புலனாய்வு(FBI போன்றவை)/17 உளவுத்துறை அமைப்புகளின் அதிகார வர்க்கத்தனர் மற்றும் இவர்களை இயக்கும் இராணுவத் தளவாட ஏகபோகங்களும் இணைந்துள்ளன.
இலான் மஸ்க்கின் கோடிக்கணக்கான டாலர்களினால் ஜனாதிபதி பதவிக்கு வந்த டிரம்ப்புடன் இதனால் பிளவு ஏற்பட்டது இயல்பே.