திசம்பர் 6 – அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி இடிப்பு நாள் கட்டுரை – எழுபது ஆண்டுகால நாடாளுமன்ற அரசியல் சாதித்தது என்ன?
சமூக வளர்ச்சிக்கு சாதியமைப்பு தடையானதென்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் சிந்தனையின் மலைமுகட்டைத் தொட்ட மாபெரும் வரலாற்று ஆளுமையாக இந்தியாவின் புதுமக் கால அரசியலில் அம்பேத்கர் காட்சி தருகிறார். அவர் மறைவுக்குப் பின்னான இந்த 62 ஆண்டுகளில் சர்வதேச அரசியலும் இந்திய...