அசாமில் இஸ்லாமியர்கள் படுகொலை – காவிப் பாசிச பயங்கரவாதிகளின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை
செப்டம்பர் 23 அன்று அசாமில் காவல் படையினரால் இஸ்லாமியர்கள் இருவர் கொல்லப்பட்டதும் உயிர் பிரியும் தருவாயில் இருந்த உடல் மீது ஓர் ஊடக புகைப்படக்காரர் ஏறிக் குதிப்பதும் சனநாயக ஆற்றல்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தில் உள்ள தர்ராங்...