மகாத்மா காந்தி 100 நாள் வேலை இந்திப் பெயர் மாற்றம் மட்டுமல்ல வயிற்றலடிக்கும் சதியே!

விவசாயத்தில் மிகக் குறைந்த வேலை நாட்கள் உள்ள நிலையில் வேலை தேடி வெளியூருக்கு, வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்ற நிலையில் 100 நாட்களாவது அரசு வேலை வாய்ப்பளித்து பசியைப் போக்க வழிவகை செய்ய பல பத்தாண்டுகள் இடதுசாரித் தொழிற்சங்கங்கள், இடதுசாரிக் கட்சிகள் போராட்ட வலியுறுத்தலின் விளைவாக ஐக்கிய முன்னணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டதே 100 நாள் வேலை எனும்
” MGNREGA – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்” 2006 முதல் செயல்பாட்டில் உள்ளது.
ஒன்றிய அரசின் முழுப் பொறுப்பில் அமலாக்கப்பட்ட இத்திட்ட அமலாக்கம் பாசக அதிகாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாநில அரசு 10°/. ஒன்றிய அரசு 90°/. எனத் தொடங்கி 25°/. மாநில அரசுகளின் நிதிச் சுமையாக மாறியது. இத்திட்டத்தின் மூலம் மாநில அரசு 40°/. ஒன்றிய அரசு 60°/. என மாற்றியுள்ளதன் மூலம் மாநில அரசுகளின் நிதி நெருக்கடி அதிகமாகும் சூழல் உருவாகியுள்ளது. காலப் போக்கில் இத்திட்டத்தை ஒழிக்கும் நோக்கமே இது. இந்தியில் பெயர் மாற்றம்…மாநில அரசுகளுக்கு நிதிச் சுமை. இது மாநில அதிகாரத்தை வெட்டிக் குறைப்பதாகும்… பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் வரை வெட்டிக் குறைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் நிதி மறுப்பின் காரணமாக. மூன்று மாதங்கள் வரை பயனாளிகளுக்கு கூலி வழங்கப்படவில்லை…
நாடு தழுவிய அளவில் கிராமப்புறப் பயனாளிகள் ஆட்குறைப்புக்கு எதிராகவும், கூலி வழங்கப்படாத நிலையையும் கண்டித்து ஒன்றிய அலுவலகங்கள் முன் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தினர்…சுமார் 1060 கோடி ஒன்றிய அரசு நிதியை வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தது….
தொடக்கத்திலிருந்தே இத்திட்டத்தை அமலாக்கும் முறை விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும் வகையில் இருந்தது..குறைந்த கூலிக்கு வேலையாட்கள் விவசாய வேலைகளுக்கு கிடைக்கவில்லை எனப் புலம்ப வைத்தது…லாபமற்ற தொழிலாக விவசாயம் நீடிப்பதை மாற்ற ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டமின்மை, இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செய்த பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயமின்மை, அரசு கொள்முதல் மறுப்பு, கார்ப்பரேட் ஆதரவு வேளாண்மைத் திட்டங்கள், அரசுகளின் வேலை வாய்ப்பு உருவாக்கப்படாத நிலை எனப் பல்வேறு காரணங்கள் மறைக்கப்பட்டன.
விவசாயிகளின் கோரிக்கைககளுக்குப் போராடி வரும் இடதுசாரி அமைப்புகள் 200 நாட்கள் வேலை வாய்ப்பும், 500 ரூபாய் கூலியும் வழங்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வந்தனர்…
நாடாளுமன்றத்தில் ” விபி ஜி ராம் ஜி “
The viksit Bharath Guarantee Rozgar and Ajeevika Mission Gramin எனும் பெயரில் இந்தி பேசாத மாநில மக்களின் வாயில் நுழையாத பெயரில் மசோதா தாக்கல் செய்து எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனங்களுக்குரியது…மகாத்மா காந்தி பெயரை மாற்றியதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். கோட்சே கொலைக்கும்பல் என நிரூபித்துள்ளனர்…
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி அஇஅதிமுக தலைவர் எடுபிடி பழனிச்சாமி 125 நாட்கள் வேலை என்பதை வரவேற்றுள்ளார்…திராவிடக் கொடுக்கு எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் நிலையில் இந்தியில் பெயர் மாற்றம் செய்திருப்பதை மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி ராம் எனப் பெயர் சூட்டியுள்ளதைக் கண்டிக்கத் தயாரில்லை..விவசாய காலங்களில் இந்த வேலை நிறுத்தி வைக்கப்படும் என்பது குறைந்த பட்ச கூலி அறிவிக்காத நிலையில் விவசாயத் தொழிலாளர்களை அதிகப்ட்ச கூலிக்கான வேலைகளைத் தேடி நகரங்களுக்கு விரட்டும் நிலை உருவாகும்…இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வைக்க கிராமப்புறத் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க அணிதிரள்வோம்! மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தது போல் திரும்பப் பெற வைக்க வேண்டும்…இடதுசாரித் தொழிற்சங்கங்கள், கட்சிகள், கிராமப்புறத் தொழிலாளர்கள் அணிதிரள்வோம்! போராடுவோம்!
தோழமையுடன்
மீ.த.பாண்டியன் – MDPandian
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு உழவர் சங்கம்
பேச: 9443184051