லத்தீன் அமெரிக்கா வட அமெரிக்காவின் புழக்கடையாகுமா? – 5

08 Dec 2025

வட மெரிக்க அதிபர் டிரம்பின் பழி தீர்க்கும் நடவடிக்கைகள்:

வெனிசுவேலாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட மீ-கன எண்ணெய்” (High Density Oil) தயாரிக்கத் தேவையான

எரிபொருள், ரசகற்பூரம் ஆகியவை வட அமெரிக்காவினால் வெனிசுவேலாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இவற்றை வட அமெரிக்கா விற்காமல் நிறுத்திவிட்டு, வெறும் கச்சா எண்ணெயை மட்டுமே வெனிசுவேலா ஏற்றுமதி செய்யும் கட்டாயத்தை ஏற்படுத்தியது. வட அமெரிக்க முதன்மைச் செயலர் மைக் பாம்பியோவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் இங்கிலாந்து வங்கியில் உள்ள வெனிசுவேலாவுக்கு சொந்தமான 120 கோடி டாலர் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விட்டனர். 

இதன் விளைவாக 2008 ஆம் ஆண்டு பீப்பாய்க்கு 160.72 வட அமெரிக்க டாலர் என்று இருந்த எண்ணை விலை, 2019 ஆம் ஆண்டு வெறும் 51.99 வட அமெரிக்க டாலராக குறைந்துவிட்டது. இதனால் வெனிசுவேலாவுக்கு 1,100 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டது.

2019 ஜனவரி 24 ஆம் தேதி வட அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலாளர் ஜான் போல்டன் “வெனிசுவேலா பெட்ரோலிய வளம் வட அமெரிக்க கம்பெனிகளின் வசமானால், நமது நாட்டின் பொருளாதாரம் மேம்படும்” என்றார்.

2019 ஜனவரி 26 ஆம் தேதி ஹூவான் காயிதோ என்ற எதிர்க்கட்சித் தலைவர் தன்னைத்தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டார். காயிதோ அரசை அங்கீகரித்து மாதுரோவை நிராகரிக்க வேண்டுமென டிரம்ப் அறிக்கை விட்டார். ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றம், காயிதோ ஜனாதிபதி பதவியேற்றதை அங்கீகரித்தது. இதற்கு கொலம்பியா, அர்கென்தீனா வலதுசாரி அரசுகள் ஆதரவு தெரிவித்தன !

ஜனவரி 28 ஆம் தேதி வெனிசுவேலா வட அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த பெட்ரோலின் விலையான 700 கோடி டாலர் தொகையை வட அமெரிக்கா முடக்கிவைத்தது. 

ஜனவரி 29ஆம் தேதி வட அமெரிக்கா வெனிசுவேலா மீது பொருளாதார-வர்த்தக தடை விதித்தது.  பெட்ரோலியம் விற்ற வகையில்  வெனிசுலாவுக்கு சேர வேண்டிய 700 கோடி டாலரை (சட்டத்துக்குப் புறம்பாக) காயிதோ  அரசின் கணக்கில் சேர்ப்பதாக அறிவித்தது.

ஜனவரி 30 ஆம் தேதி அன்று காயிதோ தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால் ஏற்கனவே டிரம்ப் தொடங்கிய பொருளாதாப் போர், ஆயுதப்போர் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக உணர்ந்த மாதுரோ, உடனடியாக இராணுவ அதிகாரிகள் தலைமையில் 50,000 மக்கள் பாதுகாப்பு அலகுகளை உருவாக்கினார். வட அமெரிக்காவின் நேரடி இராணுவ தலையீட்டுக்கு இவ்வாறு அரண் அமைத்தார் மாதுரோ, (இது வியத்நாமிய பாணி அமைப்பு). இந்த நடவடிக்கையை அவர் முன்னரே மேற்கொண்டிருக்க வேண்டும். வெறும் இராணுவத்தை மட்டுமே நம்பி இராமல் நாட்டின் பாதுகாப்புக்கு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஆயுதப் பயிற்சி கொடுத்து மக்களின் பெரும்படையை உருவாக்கி இருக்க வேண்டும்.  வெனிசுவேலாவில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ரஷ்யா சீனா துருக்கி ஈரான் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்தது போன்ற ஆட்சிக்கலைப்பு  முயற்சி இம்முறையும் தோல்வியடைந்தது. காயிதோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் 2019 ஜனவரி 30 ஆம் தேதி படுதோல்வி அடைந்தன. 

(ஆர்லால்டு ஆகஸ்ட், கெனடா, ஃபாரின் பாலிசி இன்ஸ்டிட்யூட் , டிசம்பர், 2020) & ( லியனார்தோ ஃபுளோரெஸ், காமன் ட்ரீம்ஸ் டிசம்பர் 2020).

2019 பிப்ரவரியில் வட அமெரிக்க சதியால் வெனிசுவேலா முழுவதும் மின்சாரத்தடை ஏற்படுத்தப்பட்டது.  தேசிய பெட்ரோலிய கம்பெனிக்கு (PDVSA) பணியாற்றி வந்த வட அமெரிக்க கப்பல் கம்பெனிகளின் சேவை முடக்கப்பட்டது. இதனால் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. நாளொன்றுக்கு 

16,70,000 பீப்பாய் எண்ணை உற்பத்தி ஆகி வந்த நிலை மாறி, வெறும் 10,000 பீப்பாயாக உற்பத்தி குறைந்துவிட்டது.

வெனிசுவேலாவிடம் பெட்ரோலியம் வாங்கக்கூடாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் வட அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் மைக் பம்பியோ.

முன்னாள் வட அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் டி 

எஸ்பர் தனது வாழ்க்கை சரிதத்தில், வெனிசுவேலாவில் உள்ள இயற்கை வளங்களைக் குறித்து எழுதியுள்ளார். “சுமார் 303 மில்லியன் பீப்பாய் பெட்ரோலியம், தங்கம், இரும்புத்தாது, பாக்ஸைட், கோல்தான், வைரம் என வெனிசுவேலாவில் அதிக செல்வ வளம் இருக்கிறது”. 

டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில், நேரடி ராணுவ படையெடுப்பு உள்ளிட்ட எத்தகைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மாதுரோவை பதவி நீக்க முடியும் என்று திரும்பத் திரும்ப தன்னிடம் கேட்டுக் கொண்டே இருந்ததாக எஸ்பர் கூறியுள்ளார்.  (ரோத்ரிகோ ஆகுன்யா, ட்ரூத் அவுட், அக்டோபர் 21, 2025)

வெனிசுவேலா சுதந்திர நாடாக நீடிக்க வேண்டுமானால் –  பன்னாட்டு நிதியத்தின் (IMF)  கட்டுப்பாடுகளுக்குப் பணிவது, தனியார் மயமாக்கல், தனியார் உடமை பாதுகாப்பு, எண்ணெய் வளங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைப்பது, புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது – ஆகியவை வட அமெரிக்கா அரசு பரிந்துரைக்கும்  (!?) நடவடிக்கைகள்.

இனவெறி –  நிறவெறி நாடான வட அமெரிக்கா, கருப்பின- கலப்பின தலைமை கொண்ட வெனிசுவேலா நாட்டை ஆக்கிரமித்து, மீண்டும் அம்மக்களை வறுமையில் தள்ள படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

(ரெயினால்தோ இதூரீசா 

லோபெஸ், 2019).

சீலே, ஸ்ரீலங்கா, சீனாவின் தியானென்மென்  சதுக்கப் படுகொலை, எல்ட்சின் ஆட்சியில் ரஷ்யா, இங்கெல்லாம்  பேரிடர் தாக்குதல் காலத்தில், அதையே “பேரிடர் தீர்க்கும் நடவடிக்கையாக” மாற்றி விட்டது தான் “பேரிடர் முதலாளித்துவம்” என்கிறார் நவோமி கிளீன் என்ற அறிஞர்.  

சாவேஸ் ஒரே ஒரு நடவடிக்கை எடுக்கத் தவறியதே இன்று வெனிசுவேலாவில் இந்நிலை வரக்காரணம். கூபாவின் பே ஆஃப் பிக்ஸ் பகுதியில் நேரடி வட அமெரிக்க  படையெடுப்பின் பின்பு  கூபா செய்தது போல், 2002  இல் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையின் பின் வெனிசுவேலாவில்  இருந்த அனைத்து பன்னாட்டு சொத்துகளையும் நிறுவனங்களையும் சாவேஸ் நாட்டுடைமை ஆக்கி இருக்க வேண்டும். இதைச் சாவேஸ் செய்யத் தவறியதால் இன்று   இத்தகைய மோசமான  நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இது சாவேஸ் செய்த வரலாற்றுப் பிழை.  தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயிற்சி அளித்து, மாபெரும் மக்கள் இராணுவப் படையை சாவேஸ் உருவாக்கி இருக்க வேண்டும்.  பெட்ரோல் வருவாயை மட்டுமே நம்பி ஆட்சி செய்ததால் ஏற்பட்ட சீரழிவு இது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், வாஷிங்டனில் உள்ள வெனிசுவேலா தூதரக வளாகத்தைக் கைப்பற்ற வட அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை வட அமெரிக்க சாமானிய மக்களே முறியடித்து விட்டார்கள். வெனிசுவேலா தூதரக பாதுகாப்பு நடவடிக்கை மூலம் “ஆட்சிக் கவிழ்ப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்று வட அமெரிக்க மக்கள் கூறிவிட்டனர். 

(ரெயினால்தோ இதூரீசா லோபெஸ், பிப்ரவரி, 2019).

  • அமரந்தா
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW