லத்தீன் அமெரிக்கா வட அமெரிக்காவின் புழக்கடையாகுமா? – 4

நிகோலாஸ் மாதுரோ குடியரசு தலைவர் ஆன பின்பு:
2013 இறுதியில் குடியரசுத் தலைவர் தேர்தலில் மாதுரோ 8 சதவிகிதம் அதிகம் பெற்று வெற்றி அடைந்ததன் பின், எதிர்க்கட்சிகள் பேச்சற்றுப் போயின. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களான லியோபோல்தோ லோபெஸ், மரீயா கொரீனா மச்சாதோ ஆகியோர், சாவேசிடம் காணப்பட்ட கவர்ச்சியும் ஆற்றலும்
மாதுரோவிடம் இல்லை என்றறிந்து நாட்டினுள் கலவரங்களைத் தூண்டி, கொலை கொள்ளைகளை நிகழ்த்தி, எப்படியாவது மாதுரோவை பதவி இழக்கச் செய்து விடலாம் என்று திட்டம் போட்டனர்.
UNASUR, CELAC போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் நலனுக்கான அமைப்புகள் நாடுகள் இடையே ஒற்றுமையை, பரிமாற்றங்களை சாத்தியப்படுத்தியதால், லத்தீன் அமெரிக்காவில் காலூன்ற முடியாத வட அமெரிக்கா, இந்த இருவரையும் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தது. சர்வதேச வளர்ச்சிக்கான வட அமெரிக்க நிறுவனம் (USAID) லோபெசுக்கு நிதி அளித்தது. ஜனநாயகத்திற்கான தேசிய நிதி (NED) மரீயாவுக்கு நிதி அளித்தது. மரியாவின் தேர்தல் வாக்கெடுப்பை மேற்பார்வை செய்யும் “சுமாதே” நிறுவனம் வெனிசுவேலாவில் தேர்தல்கள் முறையாக நடைபெறவில்லை என்று கூறி பலவிதமான கலவரங்களை ஏற்படுத்தின. ஸ்பெயினும் கொலம்பியாவும் அப்போது இந்த எதிர்க்கட்சிகளை ஆதரித்தன.
எதிர்க்கட்சிகளுடன் சமரசம் பேசுவது என்பது சாவேஸ் ஏற்படுத்திய கௌரவத்தைக் குறைப்பதாக உள்ளது என போராளிகளும் சமூக செயல்பாட்டாளர் களும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. சாவேஸ் ஏற்படுத்திய மக்கள் இயக்கம் வலுவிழந்து ஊழல் மக்கள் மத்தியிலும் இராணுவத்திலும் ஊடுருவி இருந்தது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், எதிர்க்கட்சிகள் கோரிய பொதுவாக்கெடுப்பே அவற்றின் மீதிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் போக்கிவிட்டது ! நாட்டு நிலையை சீராக்க எதிர்க்கட்சிகளிடம் எந்தத் தீர்வுமில்லை ! வட அமெரிக்க நிதியைக் கொண்டு நாட்டில் வன்முறை, குழப்பம், அரசை பலவீனப்படுத்துவது ஆகியவற்றை மட்டுமே எதிர்க்கட்சிகளால் செய்ய முடிந்தது. மூன்று எதிர்கட்சியினரின் தேர்வும் “தேர்தல் மோசடியினால் கிட்டியவை” என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
(எத்கார்தோ லாந்தர், செப்டம்பர், 2014).
வெனிசுவேலா தேர்தல் முறை முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு பலவித சரிபார்ப்பு முறைகளைக் கொண்டிருந்ததுதான் மாதுரோவின் பலம். இயந்திரங்கள் மூலம் வாக்குகள் செலுத்தப்பட்டாலும் அதற்கான ஒப்புகை சீட்டை இயந்திரமே அச்சடித்து வாக்காளருக்கு வழங்குகிறது. அந்த சீட்டை அருகில் உள்ள பெட்டியில் போட வேண்டும். இந்த சீட்டுகளும் இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் பின்னர் சரிபார்க்கப்படுகின்றன. இதுவே எவ்வித தவறும் நடைபெறாமல் தடுக்கிறது. இதனால், சர்வதேச நோக்கர்களிடம் வெனிசுவேலா நம்பிக்கையைப் பெற முடிந்தது. வட அமெரிக்காவின் ஆட்சிக்கவிழ்ப்பு முறைகளை தோற்கடிக்க முடிந்தது.
(ஃபெதரிகோ ஃபுயன்தெஸ், கிரீன் லெப்ட் வீக்லி, மே, 2018).
மே 2018 தேர்தலில் மாதுரோ 67.8% வாக்குகள் பெற்றார் என்கிறார் ஃபுயன்தேஸ். ஆனால் நாடு பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையில் இருப்பதாக சொல்கிறார் ஸ்டீவ் எல்னர் (லிங்க்ஸ் இன்டர்நேஷனல் மே 27, 2018)
பெட்ரோலிய ஏற்றுமதி வரவை மட்டுமே நம்பி மேலிருந்து கீழே நிதியை நேரடியாக விநியோகித்து, திட்டங்களை வெற்றிகரமாக்க வேண்டுமானால், இந்த நிதி நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரித்து, பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதுதான் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும். ஆனால் அனைத்து சமூக திட்டங்களுக்கும் பெட்ரோலிய வருவாய் தவிர வேறு வரவு
இல்லாததால், சாவேஸ் மறைவுக்குப் பின் ஏற்பட்ட பெட்ரோலிய விலை சரிவு பிரச்சனையை அதிகரித்தது.
2017 ஆம் ஆண்டு தேசிய தேர்தல் கவுன்சில் காலாவதி ஆகியது. சட்ட மன்றத்தை மீறி, சுப்ரீம் கோர்ட் சாவேசைப் பின்பற்றிய நபர்களை தேர்தல் கவுன்சில் உறுப்பினர்களாக அறிவித்தது. மாதுரோ ஓராண்டுக்கான நிர்வாக வேலைத் திட்டத்தை அரசிடம் அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் சட்டமன்றத்தைப் புறக்கணித்து, அதனை சுப்ரீம் கோர்ட்டில் அளித்தார். நாட்டின் பட்ஜெட்டையும் அவ்வாறே செய்தார்.
எதிர்க்கட்சிகள் மீண்டும் மாதுரோவை நீக்க மறுவாக்கெடுப்புக்கு கோரிக்கை வைத்தன. மாதுரோ தனது சாதுரியத்தினால் எதிர்க்கட்சிகளை அடக்க முடியாமல், பொது ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்து, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்து பதவியில் நீடிக்கிறார்.
அனுபவத்திலிருந்து பாடம் கற்கும் விவேகம் இல்லாததால், நடப்பவற்றையெல்லாம் விமர்சனப்பூர்வமாக அணுகும் திறமை அவரிடம் இல்லை.
(எத்கார்தோ லாந்தர், ஏப்ரல் 2017).
சாவேசின் மறைவால் வெனிசுவேலாவுக்கு ஏற்பட்ட பலவீனத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொருளாதாரப் போர் தொடுக்கின்றன. அதுமட்டுமின்றி சீலேவில் அரங்கேறியதைப் போன்ற ரத்தக் களறியான ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றவும் தயாராகி வருகின்றன. கள்ளச்சந்தையில் டாலர் புழக்கம், தொழிற்சாலைகளை இயங்காமல் தடுப்பது, அந்நிய முதலீடு கிட்டாமல் செய்வதற்காக வெனிசுவேலா ஒரு திவாலான நாடு என்று படம் பிடித்து காட்டுவது, செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்துவது, அத்தியாவசிய பண்டங்கள் விநியோகத்தை நிறுத்துவது எனப் பல சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அண்மையில் எண்ணெய் விலைகளை உயர்த்துவதற்கான சர்வதேச ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது உள்நாட்டு தேசிய உற்பத்தித்துறை தனியார் உற்பத்தித்துறை இரண்டும் இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளன ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக இவ்வாறாக ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது.
(மார்த்தா ஆர்னெக்கார், ஜனவரி 2017).

- அமரந்தா