அரசியலமைப்பு உருவாக்கத்தில் 15 பெண்கள்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு உதவிய 15 சுதந்திரப் போராட்டப் பெண்களின் கதைகள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைதல்,
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் (எம்.என் ராய் முன்மொழிந்தார்) தலைமையிலான அரசியலமைப்பு சபையால் நியமிக்கப்பட்ட எட்டு முக்கிய குழுக்களில் ‘வரைக்குழு‘ ஒன்றாகும். அந்த நேரத்தில் இந்தியாவிற்கு ஒரு இறையாண்மை, சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இது சமூக பொருளாதார மற்றும் அரசியல் நீதி, சிந்தனை சுதந்திரம், கருத்து, நம்பிக்கை, மற்றும் வழிபாட்டு சுதந்திரம் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்கிறது. இந்திய அரசியலமைப்பு 1949 நவம்பர் 26 அன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்பு சபையால் உருவாக்கப்பட்டது. 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.
இந்த மகத்தான அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்புக்குழு அமைக்கப்பட்டது. மேலும் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அப்துல்கலாம் ஆசாத், பி.என்.ராவ், கோபாலசாமி அய்யர், ராஜேந்திர பிரசாத், சச்சிதானந்த சின்ஹா, மற்றும் முகர்ஜி ஆகியோர் இதில் இடம்பெற்றிருந்தனர். அதே நேரத்தில், தெளிவான மற்றும் விரிவான விவாதத்திற்குப் பிறகு தெளிவான மற்றும் விரிவான வரைவு தயாரிக்கப்பட்டது.
1917 முதல், இந்தியாவில் பெண்கள் இயக்கம் அநீதிக்கு எதிராகப் போராடி வருகிறது. இந்தப் போரில் பங்கேற்று இந்தியக் குடியரசு உருவாவதற்கு தங்கள் முத்திரையைப் பதித்த இந்த 15 பெண்கள் மாநில அல்லது பிரிவு பிரதிநிதிகளாக ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை‘ வரைவதில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள், சீர்திருத்தவாதிகள், சுதந்திரப் போராளிகள் அல்லது பெண்கள் உரிமைகளுக்கான இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட பெண்கள். அவர்களில் சிலர் தண்டி யாத்திரையின்போது சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் சைமன் கமிஷனுக்கு எதிராகப் போராடினர். சிலர் சிறுபான்மை உரிமைகள், இடஒதுக்கீடு மற்றும் சுதந்திர நீதித்துறைக்காகக் குரல் எழுப்பி துன்பங்களை அனுபவித்தனர்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பிற ஆண் பிரதிநிதிகள் நினைவு கூரப்படுகிறார்கள். ஆனால் இந்த 15 பெண் உறுப்பினர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை நாம் எளிதில் மறந்து விடுகிறோம்.
இதுபோன்ற ஒரு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கப் பங்களித்த 15 பெண்களைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் இது.
அம்மு சுவாமிநாதன் (1894-1978)
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உயர்சாதி இந்து குடும்பத்தில் பிறந்தவர் அம்மு சுவாமிநாதன். அன்னி பெசன்ட், மார்கரெட் கசின்ஸ், மாலதி பட்வர்தன், திருமதி தாதாபாய் மற்றும் திருமதி அம்புஜம்மாள் ஆகியோருடன் சேர்ந்து 1917 ஆம் ஆண்டு இந்திய மகளிர் சங்கத்தை நிறுவினார். 1946 ஆம் ஆண்டு அவர் மாநில சட்டமன்றத்தின் மெட்ராஸ் சட்டமன்ற உறுப்பினரானார். நவம்பர் 24, 1949 அன்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அரசியலமைப்பு வரைவை வரைந்தபோது, மிகவும் நம்பிக்கையுடனும் இருந்த அம்மு, வெளி உலகில் உள்ள மக்கள் இந்தியாவில் பெண்களுக்கு சம உரிமைகள் மற்றும் உரிமைகள் இல்லாத ஒரு சமூகத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இப்போது இந்திய மக்கள் தங்க சொந்த ‘அரசியலமைப்பை‘ உருவாக்கியுள்ளனர் என்றும், மற்ற அனைத்து குடிமக்களைப் போலவே அவர்களும் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்கியுள்னர் என்றும் நாம் தெளிவாகக் கூறலாம்.
1952 ஆம் ஆண்டு மக்களவைக்கும், 1954 ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1959ஆம் ஆண்டில் திரைப்பட ஆர்வலர் அம்மு, திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரானார். அதே நேரத்தில் சத்யஜித்ரே தலைவரானார். பாரத் ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மற்றும் சென்சார் வாரியத்தின் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.
தாசாயணி வேலாயுதனா (1912-1978)
தாசாயணி வேலாயுதன் 1912 ஆம் ஆண்டு சூலை 4 ஆம் தேதி கொச்சியில் உள்ள போல்கட்டி தீவில் பிறந்தார். அந்த நேரத்தில், அவர் புலயா என்று அழைக்கப்படும் ஒரு சமூகத்தை வழிநடத்தினார். இத ஒரு தீவிரமான பாகுபாடு காட்டப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகமாகும். இந்த சமூகத்தில், அவர்கள் ‘மேல் ஆடை ‘ அணியும் தலித் பெண்களைப் போலவே படித்த முதல் தலைமுறையினராகவும் கணக்கிடப்படவார்கள்.
1945 ஆம் ஆண்டு கொச்சி சட்டமன்றத்திற்கு அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டார். 1946 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே பெண்மணி இவர்தான். விதான் பவனில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்- சமூக உறவுகள் தொடர்பான பல பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் மற்றும் விவாதங்களில்டாக்டர் பி.ஆர் அம்பேத்கருக்கு ஆதரவாக அவர் உறுதியாக நின்றார்.
பேகம் அஜாஸ் ரசூல் (1908-2001)
1937 முதல் 1940 வரை, அவர் கவுன்சிலின் துணைத்தலைவர் பதவியை வகித்தார். மேலும் 1950 முதல் 1952 வரை கவுன்சிலில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். இந்தியாவிலும் உலகிலும் இந்தப் பதவியை அடைந்த முதல் முஸ்லிம் பெண்மணி இவர்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பங்கேற்ற, இந்திய அரசியலமைப்புச் சபையில் இருந்த ஒரே முஸ்லிம் பெண் இவர்தான். மலேர்கோட்லா ராஜா கரனிதீல் குடும்பத்தில் பிறந்த இவர், இளம் நவாப் அஜாஸ் ரசூலை மணந்தர். விதான் பவனின் ஒரே முஸ்லிம் பெண் உறுப்பினராக அவர் இருந்தார். 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் இயற்றப்பட்ட பிறகு, பேகமும் அவரது கணவரும் முஸ்லிம் லீக்கில் சேர்ந்து தேர்தல் அரசியலில் நுழைந்தனர். 1937 தேர்தலில் உத்தரபிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1950 ஆம் ஆண்டு, இந்திய முஸ்லிம் லீக் கலைக்கப்பட்டது. பேகம் அஜாஸ் ரசூல் காங்கிரசில் இணைந்தார். 1952 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969 முதல் 1990 வரை உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1969 மற்றும் 1971க்கு இடையில் அவர் சமூக நலம் மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்தார். 2000 ஆம் ஆண்டில், சமூகப் பணிகளுக்கான அவரது பங்களிப்புக்காக அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. ஜமீன்தாரி குடும்ப பின்னணி இருந்தபோதிலும், அவர் ஜமீன்தாரி ஒழிப்பின் வலுவான ஆதரவாளராக அறியப்பட்டார். மதத்தின் அடிப்படையில் தனித்த தொகுதிகளுக்கான கோரிக்கையை அவர் கடுமையாக எதிர்த்தார்.
துர்காபாய் தேஷ்முக் (1909 -1981)
துர்காபாய் தேஷ்மக் 1909 சூலை 15 அன்று ராஜமுந்திரியில் பிறந்தார். பன்னிரண்டு வயதில், அவர் ‘ஆந்திர கேசரி டி‘ ஆனார். மிகவும் துடிப்புடன் ‘ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். 1930 ஆம் ஆண்டு, சென்னை நகரில் உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். 1936 ஆம் ஆண்டு அவர், ஆந்திர மகிளா சபாவை நிறுவினார். இது ஒரு தசாப்தத்திற்குள் சென்னை நகரில் ஒரு முன்னணி கல்வி மற்றும் சமூக நல அமைப்பாக மாறியது. மகாராஷ்டிராவைப் பற்றிய அவரது எளிதான அறிமுகம் என்ன வென்றால், அவர் பிரபல பொருளாதார நிபுணரும் இந்திய மத்திய அமைச்சரவை உறுப்பினருமான ஸ்ரீசி.டி. தேஷ்முக்கின் மனைவி ஆவர். மத்திய சமூக நல வாரியம், தேசிய மகளிர் கல்வி கவுன்சில், தேசிய பெண்கள் குழு மற்றும் மகளிர் கல்வி நிறுவனம் பான்ற பல மத்திய அமைப்புகளுக்கு அவர் தலைமைதாங்கினார். அதே நேரத்தில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், திட்டக் கமிஷனின் உறுப்பினராகவும் இருந்தார். துர்காபாய் சென்னை அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹன்சா ஜிவ்ராஜ் மேத்தா (1897-1995)
1897 ஆம் ஆண்டு சூலை 3 ஆம் தேதி, பரோடாவின் திவானான மனுபாய் நந்த்சங்கர் மேத்தாவின் மகள் ஹன்சா இங்கிலாந்தில் இதழியல் மற்றும் சமூகவியல் பயின்றார். ஒரு சமூக சீர்திருத்தவாதி மற்றும் சமூக ஆர்வலர் என்பதைத் தவிர, அவர் ஒரு சிறந்த ஆசிரியர் மற்றும் எழுத்தாளராகவும் இருந்தார்.
குஜராத்தி மொழியில் குழந்தைகளுக்கான பல புத்தகங்களை அவர் மொழிபெயர்த்தார். அவற்றில் கல்லிவரின் பயணங்கள், ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட், ‘வெனிஸின் வணிகர்‘ மற்றும் வால்மீகியின் ராமாயணம் ஆகியவை அடங்கும். காந்திஜியுடன் தொடர்பு கொண்ட பிறகு, வெளிநாட்டு ஆடைகள், பொருட்கள், மதுபானங்களை விற்கும் கடைகளைக் கண்காணிக்க ஒரு குழுவை நியமித்தார். மேலும் அவரே இந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்தார். 1926 ஆம் ஆண்டில் அவர் மும்பை பள்ளிக் குழுவிற்கு‘ தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1945-46 ஆம் ஆண்டில் அவர் அகில இந்திய மகிளா பரிஷசத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய மகிள பரிஷத்தின் தலைவரான அவர், தனது உரையில், பெண்களுக்கான உரிமைகளுக்கான ‘சாசனத்தை‘ அறிவித்தார். அதில் பெண்களுக்கு சம குடியுரிமை, சம கல்வி மற்றும் சுகாதாரம், சமமான பகிர்வு, செல்வத்தில் சம பங்கு, திருமணத்தில் சம உரிமைகள் போன்றவை அடங்கும்.
1945 முதல் 1960 வரை அவர் இந்தியாவில் SNDT மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், அகில இந்திய இடைநிலைக் கல்வி வாரிய உறுப்பினராகவும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வாரியத் தலைவராகவும், பரோடா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். அவர் யுனெஸ்கோவின் உறுப்பினராகவும் இருந்தார்.
கமலா சவுத்தி (1908-1970)
கமலா சவுத்ரி லக்னோவின் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவர் பிரபல கலெக்டர் ராய் மனோகர் தயாளின் மகள். இருப்பினும், அந்த நேரத்தில் தனது கல்வியைத் தொடர அவர் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. உள்நாட்டில் ஏகாதிபத்திய விசுவாசிகளிடமிருந்து பிரிந்து தேசியக் கழுவல் சேர்ந்தார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தொடங்கிய ‘குடிமை ஒத்துழையாமை‘ இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 54வது அமர்வின் துணைத் தலைவராக இருந்த அவர், எழுபதுகளின் பிற்பகுதியில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காதி மற்றும் கிராமத் தொழில்களின் விரிவாக்கத்திற்காக அவர் எப்போதும் பாடுபட்டார். அவர் ஒரு பிரபலமான புனைக்கதை எழுத்தாளர், ‘கல்பித் கதா‘வின் ஆசிரியர். உமத், பிக்னிக், யாத்ரா, பெல்பத்ரா போன்ற அவரது பல கதைத் தொகுப்புகள் பிரபலமானவை. இந்தக் கதைகளிலிருந்து விவசாயிகளின் மோசமான நிலைமை போன்ற சமூகப் பிரச்சனைகளையும் அவர் கையாண்டார்.
லீலா ராய் (1900-1970)
லீலா ராய் 1900 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி கோல்பராவில் உள்ள ஆசாவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு துணை நீதிபதியாகவும், தேசியவாத இயக்கத்தின் மீது மிகுந்த பச்சாதாபம் கொண்டவராகவும் இருந்தார். அவர் 1921 இல் பெதுன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மற்றும் ‘அகில இந்திய வங்காள பெண்கள் வாக்குரிமைக் குழுவின்‘ செயலாளரானார். மற்றும் பெண்களின் உரிமைகளைக் கோருவதற்காக பல கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.
1923 ஆம் ஆண்டில், பல நண்பர்களின் உதவியுடன், அவர் கிளர்ச்சியூட்டும் ‘தீபாலி சங்கம் மற்றும் பல பட்டறைகளை உருவாக்கினார். அவை பல முக்கிய தலைவர்கள் பங்கேற்ற அரசியல் விவாத மையங்களாக மாறியது. பின்னர், 1926 இல், அவர் டாக்கா மற்றும் கல்கத்தாவில் பெண் மாணவர்களுக்கான ‘சதாரி சங்கம்‘ ஒன்றை நிறுவினார். டாக்கா ‘மகிளா சத்தியாக்கிரக சங்கம்‘ நிறுவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். ‘உப்பு மீதான வரிக்கு எதிராக‘ அவர்கள் அனைவரும் அமைத்த இயக்கத்தில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். ரவீந்திரநாத் தாகூரின் ஆசீர்வாதத்தைப் பெற்ற ‘ஜெயஸ்ரீ‘ என்ற பத்திரிகையின் ஆசிரியரானார். பெண்களுக்கு இணை கல்வி மற்றும் பெண் மாணவர்களை சேர்க்க‘ அனுமதிக்காத டாக்கா பல்கலைக்கழகம், ஆனால், அதையும்மீறி துணைவேந்தரிடம் ஒரு சிறப்பு கோரிக்கையை முன்வைத்து போராடி ஆராய்ந்தது, பின் சேர்க்கை கிடைத்தது. மேலும் அவர் ‘எம்.ஏ‘ பட்டத்தையும் பெற்றார்.
1937 ஆம் ஆண்டு, அவர் காங்கிரசில் சேர்ந்து வங்காள மகிளா மாகாண கங்கிரஸை நிறுவினார். சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த மகிளா உப சமிதியில் உறுப்பினரானார். 1940 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் சிறைக்குசச் சென்றபோது, அவர் ஃபார்வர்டு பிளாக் வீக்லியின் ஆசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். இந்தியாவை விட்டு வெறியேறுவதற்கு முன்பு நேதாஜி கட்சியின் முழுக் கட்டுப்பாட்டையும் லீலா ராய் மற்றும் அவரது கணவரிடம் ஒப்படைத்தார். மகாத்மா காந்தியின் உத்தரவின் பேரில், 1947 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறை கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு தனி மையத்தை அமைத்து, படகுகளில் சிக்கிய 400 பெண்களை மீட்டார். 1960 ஆம் ஆண்டு பார்வர்டு பிளாக் (சுபாஷிஸ்ட்) கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினராக ‘லீலா ராய்‘ இருந்தார்.
மாலதி தேவி சவுத்ரி (1904-15)
மாலதி சவுத்ரி 1904 ஆம் ஆண்டு முன்னாள் வங்காளத்தில் இப்போது வங்காளதேசம்) ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை வழக்கறிஞர் குமுத் நாத் சென். 1921 ஆம் ஆண்டு 16 வயதில் மாலதி சவுத்ரி குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் விஸ்வ பாரதியில் சேர்க்கப்பட்டார். அங்குதான் அவருக்கு புதிய அரசியல் எல்லைகள் திறக்கப்பட்டன. மேலும் சர்வதேச நற்பெயர் மற்றும் புகழ் பெற்ற அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவர் ஒரிசாவுக்கு குடிபெயர்ந்தார். கரும்பு விவசாயிகள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு உதவினார். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து வயது வந்தோர் கல்வி வகுப்புகளையும் அவர் தொடங்கினார். சுதந்திரப் போராட்ட வீரர்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குழந்தைகளுக்கு கல்வி வழங்க ஒரிசாவில் பாஜிராவ் விடுதியை நிறுவினார். தனது கணவருடன் சேர்ந்து, அவர் உப்பு சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டார். பலமுறை சிறைக்குச் சென்ற பிறகு, அவர் தனது சக கைதிகளுக்கு கற்பிக்கத் தொடங்கினார்.
1933 ஆம் ஆண்டு அவர் உத்கல் காங்கிரஸ் சமாஜ்வாடி சங்கமம்‘ என்ற அமைப்பை நிறுவினார். அவர் மார்க்சிய சிந்தனையின் முன்னோடியாக இருந்தார். ஏழை விவசாயிகளை கடன் கொடுப்பவர்களிடமிருந்தும் நில உரிமையாளர்களிடமிருந்தும் காப்பாற்ற, அவர் ‘கிருசாக்‘ இயக்கத்தை ஏற்பாடு செய்தார். 1946 முதல், அவர் அரசியலமைப்பு சட்டமன்ற குழுவில் உறுப்பினராக இருந்தார். பின்னர் அவர் இந்திரா காந்தியால் விதிக்கப்பட்ட எமர்ஜென்சியை எதிர்த்தார். இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார்.
1934 ஆம் ஆண்டு ஒடிசாவில் நடந்த புகழ்பெற்ற “பாதயாத்திரையில் காந்திஜியுடன் இணைந்து கொண்டார். ஒடிசாவில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் மேம்பாட்டிற்காக பாஜிராவ் சத்ரவாசா‘ போன்ற பல அமைப்புகளை அவர் நிறுவினார். தீண்டாமை, நிலப்பிரபுத்துவம், மூடநம்பிக்கை மற்றும் கல்வியறிவின்மைக்கு எதிராக அவர் போராடினார். இது ஒடிசா சமூகத்தில் மாற்றத்திற்கு வழிவகுத்தது.
பூர்ணிமா பானர்ஜி (1911-1951)
பூர்ணிமா பானர்ஜி ஒரு சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகவும், 1946 முதல் 1950 வரை அரசியலமைப்புச் சபைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அவர் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலியின் தங்கையாவார். அவர் அலகாபாத்தில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் குழுவின் உறுப்பினராக இருந்தார். 1930கள் மற்றும் 40களின் பிற்பகுதியில் சுதந்திர இயக்கத்தின் முன்னணியில் இருந்தார். இந்த காலகட்டத்தில், சுதந்திர இயக்கத்தில் பங்கேற்ற பெண்களின் ஒரு நல்ல வலைப்பின்னல் பின்னிப் பிணைந்தது. அவர்களில் ஒருவராக இருந்தார். நகரக்குழுவின் செயலாளராக, தொழிற்சங்கங்கள், விவசாயிகள் கூட்டங்களை ஒழுங்கமைக்கும் முக்கிய பொறுப்பை அவர் வகித்தார். அவரது உரைகளின் பல அம்சங்களில், மிக முக்கியமான அம்சம் சோசலிச சித்தாந்தத்தின் மீதான அவரது வலுவான அர்ப்பணிப்பு கிட்டத்தட்ட 40 ஆண்டுகால வாழ்க்கையில் அவரது சாதனைகள் நிச்சயமாக பாராட்டத்தக்கவை.
இளவரசி அம்ரித் கவுர்
ராஜ்குமாரி அம்ரித் கவுர் பிப்ரவரி 2, 1889 அன்று அரச குடும்பத்தில் பிறந்தார். இங்கிலாந்தில் கல்வி பயின்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு இங்கிலாந்து திரும்பிய பிறகு மகாத்மா காந்தியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்தியாவுக்கு சுதந்திரம் தேவை என்பதை அவரை நம்ப வைத்து, சுதந்திர இயக்கத்தில் பங்கேற்கத் தொடங்கியது.
அவர் அகில இந்திய மகளிர் மாநாட்டின் முதல் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் ஆனார். ‘தண்டி மார்ச்‘ சத்தியாக் கிரகத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த 16 ஆண்டுகளுக்கு அமீர் உம்ராவ் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், காந்திஜியின் ஆசிரமத்தில் கடினமான வாழ்க்கையை வாழ்ந்தார்.
ரேணுகா ரே (1904-1997)
ரேணுகா ரே ஐ.சி.எஸ் அதிகாரி சதீஷ் சந்திர முகர்ஜியின் மகள். அவர் ஒரு சமூக சேவகர் மற்றும் அகில இந்திய மகிளா பரிஷத்தின் உறுப்பினராக இருந்தார். ரேணுகானி லண்டனில் உள்ள ‘லண்டன ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-ல் பட்டம் பெற்று பி.ஏ.பட்டம்‘ பெற்றார். 1934ஆம் ஆண்டு, அவர் ‘அகில இநதிய மகளிர் கவுன்சிலின் செயலாளரானார். கூட்டத்தில் ‘இந்தியப் பெண்களின் சட்ட இயலாமை‘ குறித்த ஆவணங்களை அவர் வழங்கினார். உலகிலேயே இந்தியப் பெண்களின் நிலை மிகவும் அநீதியானது மற்றும் பாதிக்கப்படக்கூடியது என்று கூறி ‘சீரான தனிநபர் சட்டம்‘ வேண்டும் என்று அவர் கோரினார். 1943 முதல் 1946 வரை அவர் சட்டமன்றம் அரசியலமைப்பு சபை மற்றும் தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1952-57 வரை மேற்கு வங்க சட்டமன்றத்தில் மறுவாழ்வு அமைச்சராக பணியாற்றினார். அவர் மலாட் மக்களவை உறுப்பினராக இருந்தார்.
சரோஜினி நாயுடு (1839-1949)
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு சிறந்த ஆர்வலர், திறமையான பேச்சாளர் மற்றும் கவிஞர், அவர் ஹைதராபாத்தில் ஒரு பண்பட்ட வளமான மற்றும் படித்த குடும்பத்தில் பிறந்தார். அவர் ‘இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுகிறார். பல்வேறு காரணங்களுக்காக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, கோபாலகிருஷ்ண கோகலே போன்ற சிறந்த தலைவர்களுடன் அவர் பழகினார். அவர்களின் நடைமுறைகள் மற்றும் அவர்களின் நெறிமுறைக் கருத்துக்கள் மற்றும் சிந்தனை செயல்முறைகளால் ஈர்க்கப்பட்ட அவர் ‘ஹோம்ரூல்லீக்- க்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தனது உரைகளில் இளைஞர் நலன், தொழிலாளர் கண்ணியம், பெண்கள் சுதந்திரம் மற்றும் தேசியவாதத்தை ஆதரித்தார். ஹைதராபாத்தில் பிளேக் நோய் பரவியபோது, மக்களுக்கு உதவ அவர் கடுமையாக உழைத்தார். பல்வேறு இயக்கங்களில் காங்கிரசின் நோக்கத்தைப் பரப்பி பிரச்சாரம் செய்தார். காந்திஜியின் மரணத்திற்குப் பிறகு அவர் மும்பையில் வசிக்க முடிவு செய்தார். மும்பை மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மாகாண காங்கிரசின் தலைவரானார்.
சுசேதா கிருபலானி (1908-1974)
சுசேதா மஜீம்தார் தனது பெற்றோரிடமிருந்து பிறந்து சுசேதா கிருபலானி என்று அழைக்கப்படுகிறார். அவர் 1908 ஆம் ஆண்டு சூன் 25ஆம் தேதி அம்பாலாவில் பிறந்தார். சுசேதா கிருபலானி சுதந்திர இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சரானார். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் அவரது பங்கு குறிப்பாக மறக்க முடியாதது. நாடாளுமன்றத்தில் ‘வந்தே மாதரம்‘ பாடலைப் பாடியதற்காக அவருக்கு முதல் கௌரவம் வழங்கப்பட்டது. அவர் ஒரு சுதந்திரப்போராட்ட வீரராகவும் அரசியல்வாதியாகவும் பிரபலமானார். மகாத்மா காந்தியுடன் அகிம்சைப் பாதையில் நடந்தார். மற்றவர்களைப் போலவே சிறைவாசம் அனுபவித்தது மட்டுமல்லாமல், அவரது சகாக்கள் சிறையில் இருந்தபோது, காங்கிரசின் மகளிர் பிரிவின் உதவியுடன் 2 ஆண்டுகள் காவல்துறையினரிடமிருந்த ஒளிந்துகொண்டு இயக்கத்திற்கு உதவினார்.
விஜயலட்சுமி பண்டிட் (1900-01)
விஜயலட்சுமி பண்டிட் மோதிலால் நேருவின் மகள் மற்றும் ஜவஹர்லால் நேருவின் சகோதரி ஆவார். அரசியலில் இருந்தபோது, மிகவும் கூர்மையான அறிவாற்றல் கொண்ட ரஞ்சித் பண்டிட்டை சந்தித்தார். மேலும் அவரது காதல் திருமணத்திற்குப் பிறகு, அவர் நேருவின் விஜயலட்சுமி பண்டிட் ஆனார்.
இந்திய அரசியலமைப்பு சபையின் 15 பெண் உறுப்பினர்களில் இவரும் ஒருவர். விஜயலட்சுமி பண்டிட் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறந்த பேச்சாளராகவும் பிரபலமானார். 21 பல்கலைக்கழகங்கள் அவருக்கு ‘டாக்டரேட் பட்டம் வழங்கி கௌரவித்தன. 1962-64 வரை மகாராஷ்டிராவின் ராஜ்யபாலாக பணியாற்றினார். 1953 இல் ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவரானார். பின்னர் அவர் புல்பூர் தொகுதியிலிருந்து எம்.பியாக, தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1939ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப்போரில் போர் எதிர்ப்பு ஆர்வலராகச் சேர்ந்த பங்கேற்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கையை அறிவிப்பதை அவர் எதிர்த்தார்.
அன்னி மெஸ்கரென் (1902-1963)
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் லத்தீன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் ஆனி மெள்கரேன். திருவிதாங்கூர் மாநில காங்கிரசில் இணைந்த முதல் பெண்மணி மற்றும் திருவிதாங்கூர் மாநில காங்கிரஸ் செயற்குழுவின் முதல் பெண் உறுப்பினர் ஆவார். இந்திய சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைப்புக்காகப் போராடிய திருவிதாங்கூர் மாநிலத்தின் உற்சாகமான தலைவர்களில் ஒருவராக அவர் இருந்தார். சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றதன் காரணமாக, 1939-47 காலகட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டதன் காரணமாக அவர் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனி மஸ்கரேன் மற்றும் அவரது கூட்டாளிகளின் சொத்துக்கள் மற்றும் உயிர்களை ஆங்கிலேயர்கள் தொடர்ந்து தாக்கினர். 1949-50 காலகட்டத்தில் சுகாதாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராகப் பணியாற்றினார்.
அவரது அரசியல் வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான திருப்புமுனை என்னவென்றால், தனது மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கான போராட்டத்தில் விஜய் சிங் பதிக் மற்றும் ஷேக் முகமது அப்துல்லா போன்ற பிற தலைவர்களுடன் சேர்ந்து, அவரது மாநிலத்தின் வரலாற்றிலும் பல சுதேச அரசுகளின் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மற்றவற்றுடன், அரசியலமைப்பின் 306(பி) பிரிவை அவர் வலியுறுத்தினார். இது அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் கொள்கையின்படி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
அரசியலமைப்பு சபையில் இணைந்த பிறகு, சபைக்கு முன்பாக இருந்த அனைத்து பேச்சாளர்களையும் வரவேற்று, “இந்த சபையில் உள்ள சில பெண்களின் சார்பாக, எங்களுக்கு போதுமான பாதுகாப்பும், எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்புகளும் வழங்கப்படும் என்று கூறினார். தனது வெளிப்படையான பேச்சுத்திறன் காரணமாக, அரசியலமைப்பு கட்டமைப்பில் தனது முத்திரையைப் பதித்தார்.
வசந்தி கோகலே, எழுத்தாளர்.
தமிழில்: வ.ரமணி
நன்றி: https://countercurrents.org/