காதலே நிம்மதி – யவனிகா சாந்தி

30 Aug 2025

இன்று வரை
மிகச் சாதுர்யமாய்
மறைக்கப்பட்டிருக்கிறது – ஓர் நாடகக் காதல்..,

ரகசியமாய்
ஒளித்து வைத்த
சலனங்கள் ஏதுமின்றி
ஏனையோரின்
காதல் தவிப்புகள் அனைத்தும்
கொளுத்தியும் ,
கொன்றும்
முடித்து வைக்கப்பட்டன – இத்தனை காலமாய்..,

அன்பின் பெருமூச்சை
அழித்த கணக்கை
கரைக்கவும் முடியாமல் ,
கடந்து பயணிக்கவும் வழி தெரியாமல்
அந்திமக காலத்தில்
அல்லல்படுகிறது – ஒரு ஜீவன்

அந்தரங்கம் ,
அடுத்தவர் வாழ்க்கை எனும்
நியாயங்களுடனும் ,
மிகுந்த மௌனத்துடனும்
கடந்து போவதைக்
கைப்பிடித்து தடுக்கிறான் – என் இளவரசன்..,

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW