மதுரை மதநல்லிணக்க கூட்டமைப்புக்கு எதிராக இந்துமுன்னணி அடாவடி – மீ.த.பாண்டியன் கண்டனம்

மதுரை10_08_2025
மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆதரவு மற்றும் இந்துமுன்னணி மதுரை சூன் மாத மாநாட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மதக்கலவர அரசியல் பேசியதாக மதநல்லிணக்க கூட்டமைப்பின் புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக மாநகர் காவல்துறையிடம் அனுமதிக் கடிதம் கொடுத்து முகநூல், புலனங்களில் ஒருங்கிணைப்பாளரான – மீ.த.பாண்டியன் – எனது தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் விசிக துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆளூர். ஷா நவாஸ், தமிழ்ப்புலிகள் தலைவர் வழக்கறிஞர் நாகை.திருவள்ளுவன் பங்கேற்கும் செய்திகள் பரவலாக்கப்பட்டன.
திடீரென அதே நாளில், அதே இடத்தில், அதே நேரத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பைக் கண்டித்து இந்து முன்னணி – தமிழ்நாடு எனும் பெயரில் ஆர்ப்பாட்டம் என 08-08-25 அன்று இரவு புலனத்தில் கூட்டமைப்புத் தோழர்கள் கண்டுள்ளனர்…
10-08-2025 அன்று மாலை கடுமையான மழைக்கிடையே புதூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் தொடங்கினோம்…
திடீரென இருவர் இருசக்கர வாகனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமிடத்திற்கு முன்னே ” பாரத் மாதாகீ ஜே” என முழக்கமிட்டு விரைந்தனர். ஆர்ப்பாட்டத் தோழர்கள் விரைந்து சென்று விரட்டினர்… அடிதடி தவிர்க்கப்பட்டது..காவல்துறையினர் பிடித்து வண்டியில் ஏற்றினர். வழக்குப் பதிவு செய்து பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.. தோழர்கள் சாலையை மறிக்க முயற்சித்தனர். சமாதானப்படுத்தி ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தோம்…
அழைக்கப்பட்ட தலைவர்கள் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அவர்களின் சட்டவிரோதமான அணுகுமுறையை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களை அவமானப்படுத்தியது குறித்து உரையாற்றி முடித்தனர்…
அழகர் கோவில் சாலையில் ஆர்ப்பாட்டம் நடக்குமிடத்துக்கு வரக் கூடியிருந்த 50க்கும் மேற்பட்ட பாசக – இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்…
சட்டப்பூர்வமாக சனநாயகப் பூர்வமாக இயங்குவதையும் கலவரமாக்கும் இந்து முன்னணி – பாசக சங்பரிவாரக் கும்பலுக்கும் நீதிபதிக்கும் என்ன தொடர்பு? மதுரையில் இயங்கும் மக்கள் இயக்கங்கள், அம்பேத்கர், பெரியார், தமிழ்தேசிய அமைப்புகள், இடதுசாரிக்கட்சிகள் பங்கேற்கும் #மதுரைமதநல்லிணக்கமக்கள்_கூட்டமைப்பின் செயல்பாடுகள் கடந்த சனவரி முதல் காவிப்படையினரின் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க முயலும் செயலுக்குத் தடையாக இருக்கிறது.
நீதித்துறையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புகள் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகாரளிக்க உரிமை உண்டு. அதற்காக நீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கில் வரவழைத்து ” கோழை” “காமெடி பீஸ்” என வாஞ்சிநாதன் அவர்களைச் சனாதனவாதியாகத் தன்னை அறிவித்துப் பல மேடைகளில் மேடைகளில் உளறித் திரியும் ஜி.ஆர்.எஸ் அவமானப்படுத்துவதை சனநாயக ரீதியாக எதிர்த்து நிற்கிறோம்…
நீதிபதியின் அடிவருடிகள் இதை சகித்துக் கொள்ள முடியாமல் கலவரத்தை உருவாக்குவது என்பது வீதிகளில் கணக்குத் தீர்க்கும் நிலைக்குத் தள்ளுகிறது. தமிழ்நாடு அரசின் காவல்துறை கலவரத்தை மதுரையில் உருவாக்க முனையும் சங்பரிவாரக் கும்பலைக் கண்டறிந்து களை எடுக்க வேண்டும்…கலவரம் செய்பவர்களைப் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க காவல்துறை எதற்கு? இந்த அளவுகோல் சங்பரிவாருக்கு மட்டுமா?
பாசிசத்தை எதிர்த்து நிற்கும் மக்கள் இயக்கங்கள் ஒரணியில் நின்று பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டும்…
மதுரை – திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம் எனும் இந்து முன்னணி, பாசக சங்பரிவார் அமைப்புகளை முதன்மை எதிரியாக முன்னிறுத்தி மதச்சார்பற்ற சக்திகள், மதுரையின் மதநல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிப்போம்! தொடர்ந்து முன் செல்வோம்!
தோழமையுடன்
மீ.த.பாண்டியன்
ஒருங்கிணைப்பாளர்
மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு