காங்கோவில் என்ன நடக்கிறது?

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில், காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கெல்லையில் அமைந்துள்ள கோமா என்ற நகரத்தின்மீது எம்.23 என்றழைக்கப்படும் புரட்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக செய்திகள் பரவத் தொடங்கின. கையில் அடிபட்ட நிலையில் காங்கோ இராணுவ வீரர் ஒருவர் அழுத நிலையில் பேசிய காணொளி ஒன்றும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, உலகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
மத்திய ஆப்பிரிக்காவில், பூமத்தியரேகையில்அமைந்துள்ளதுகாங்கோ ஜனநாயகக் குடியரசு. 23,45,409 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விருந்தள்ள இந்நாடு, உலகளவில் 11 ஆவது பெரிய பரப்பளவு கொண்ட நாடாகவும், ஆப்பிரிக்காவில் 2 ஆவது பெரிய பரப்பளவு கொண்ட நாடாகவும் விளங்குகிறது. சுற்றியும் 9 நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.இந்நாடு இயற்கை வளங்கள், குறிப்பாக கனிமவளங்கள் நிறைந்த நாடாகும். சுமார் 11 கோடி மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில், 200 தனித்துவமான இனக்குழுக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல பத்தாண்டுகளாக சிறிதும் பெரிதுமாக இனக்குழுக்களுக்கு உள்ளேயும், அண்டை நாடுகளுடனும் போர்கள் நடந்த வண்ணம் உள்ளன. இப்போது நடைபெற்றுவரும் போரானது, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோ ஜனநாயகக் குடியரசின் மாநிலங்களில் ஒன்றான வடக்கு கிவு மாநிலத்தில் எம்.23 அமைப்பின் செல்வாக்குள்ள பகுதிகளில் ஒன்றான ருட்சுரு பகுதியில் துவங்கியது. தொடக்கத்தில், காங்கோ இராணுவம், ஐ.நா. அமைதிப் படை மற்றும் உகாண்டா இராணுவம் ஆகியவற்றின் உதவியால், எம்.23 தாக்குதல்களைமுறியடித்தது. இதனையடுத்து, எம்.23 போராளிகள் மலைகளுக்குள்பதுங்கினர். பின்னர் மீண்டும் அதே பகுதியில் தலையெடுத்த எம்.23 போராளிகளுடன், பேச்சுவார்த்தை நடத்தத்தயாரில்லை என அறிவித்த காங்கோ இராணுவம் அவர்களை அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபடத் துவங்கியது. ஆனால் அவர்கள் ருவாண்டா நாட்டு இராணுவத்தின் உதவியுடன் தொடர் தாக்குதல்கள் மூலம் காங்கோஇராணுவத்தைப் படிப்படியாக பின்வாங்கச் செய்தனர். தொடர்ச்சியாக எம்.23 தனது தாக்குதல்களைதெற்குகிவுமாநிலத்திலும்விரிவுபடுத்தியது. இந்நிலையில்,எம்.23 தாக்குதல்களின்போதுசரணடைந்தஇராணுவ வீரர்களும், காவல்துறையினரும், எம்.23யிடம் சரண்டைவதும், அருகிலுள்ள உகாண்டா நாட்டுக்குத் தப்பியோடுவதும் தொடர்கதையானது. தாக்குதல் நடந்த பகுதிகளில் வசித்த பொதுமக்கள், அகதிகளாக அங்கிருந்து இடம்பெயர்ந்து, அவ்விரு மாநிலங்களின் தலைநகரங்களான கோமா மற்றும் புக்காவு ஆகிய நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர்.
எம்.23 தனது செயல்பாடுகளுக்குமுக்கியக் காரணமாக, காங்கோ இராணுவம் மற்றும் எஃப்.டி.எல்.ஆர். (ருவாண்டாவிடுதலைக்கான ஜனநாயக சக்திகள்) ஆகிய அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகளே காரணம் என்று தெரிவித்தது. எஃப்.டி.எல்.ஆர் அமைப்பு, ருவாண்டாநாட்டிலுள்ளடுட்சி இன ஆதிக்கத்துக்கு எதிராக ஹுட்டு இன ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயல்வதாக அறிவித்து கிழக்கு காங்கோவில் செயல்படும் அமைப்பாகும். 1994 இல்ருவாண்டாவில் டுட்சி இன மக்ககளின் மீது நடைபெற்ற இனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள் இவ்வமைப்பில் தலைமை வகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காங்கோ இராணுவம் எம்.23 போராளிக்குழுவுக்கு எதிரான நடவடிக்கைகளில் எஃப்.டி.எல்.ஆர்அமைப்பைபயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எம்.23 போராளிக்குழுவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிற பகுதிகளிலிருந்து இராணுவத்தினரை காங்கோ அரசாங்கம் அனுப்பியது. ஆனால் இதன் விளைவாக பிற பகுதிகளில் உள்ள போராளிக்குழுக்கள் வலுப்பெறத்துவங்கின. 2023இன் இறுதியில் கிழக்கு காங்கோவில் மட்டும் 120 போராளிக்குழுக்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. அதுபோல, 2024 ஜூலை மாதத்தில் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் ஆணையின் பேரில் சமர்ப்பிக்கப்பட்டஅறிக்கையில், ருவாண்டா இராணுவம் காங்கோவின் நியாரகோங்கோ, ருட்சுரு, மசிசி ஆகிய பகுதிகளில் 3000 முதல் 4000 நடவடிக்கைகளை நடத்தி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் எம்.23 போராளிக் குழுவின் எண்ணிக்கைக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக, சுமார் 3000 ருவாண்டாஇராணுவ வீரர்கள் காங்கோவில் எம்.23 குழுவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
2025இல் தீவிரமான எம்.23 இன் நடவடிக்கைகள், முதலில் மசிசி நகரத்தைக் அவர்களுக்கு கைப்பற்றிக் கொடுத்தது. ஜனவரியின் இறுதியில் வடக்கு கிவ் மாநிலத்தின்தலைநகரானகோமாவை சுற்றி வளைத்த எம்.23 போராளிகள் தீவிர தாக்குதல்களில்ஈடுபட்டனர். ஜனவரி 27 ஆம் தேதி, கோமாநகரைக் கைப்பற்றியது எம்.23 எக்ஸ்தளத்தில் அறிவித்தது. இரண்டு வருடங்களிக்கும் மேலாக நடந்து வந்த போரினால்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோமாவில் குவிந்திருந்த பொது மக்களும்தாக்குதலுக்குஉள்ளாயினர். எம்.23 குழுவின் தாக்குதலுக்குகோமா விமான நிலையமும், மாகாணமருத்துவமனையும் கூட தப்பவில்லை. எம்.23 யின் தாக்குதல்களில் பொது மக்கள் பல மாண்டனர்.
பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் ஐ.நா. தெரிவிக்கிறது. குறிப்பாக, கோமாதலைநகரைச்சுற்றியுள்ளமுகாம்களில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்முறைக்குட்படுத்தப்பட்டதாக தகவல்கள்வெளியாயின. உணவு சேகரிக்கவும், சுள்ளிபொருக்கவும் வரும் பெண்கள் பாலியல் வற்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டனர். காங்கோ இராணுவமும், பொது மக்களைசந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொன்றது. கோமாவில்நிகழ்த்தப்பட்டகொடூரத்தை அறிந்த காங்கோ மக்கள் சர்வதேச சமூகம் தலையிடக் கோரி, காங்கோ நாட்டின் தலைநகர் கின்சாஷாவில் அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், உகாண்டா, கென்யா, நெதர்லாண்ட் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர். இதில் கென்யாதூதரகத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். ருவாண்டாஅரசினைக்கண்டித்த சர்வதேச நாடுகள், எம்.23 குழுவின் மீது தணிக்கைகளைஅறிவித்தனர். ஆனாலும், எம்.23 குழு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி தெற்குகீவுமாநிலத்தின் தலைநகர் புக்காவுவையும் கைப்பற்றியது. கிழக்கு காங்கோவின் கனிம வளம் நிறைந்த பகுதிகளையும் எம்.23 அமைப்பு குறிவைத்து தாக்குதல் நடத்தியது. காங்கோ இராணுவத்திலிருந்தும், காவல்துறையிலிருந்தும் எம்.23 போராளிக் குழுக்களிடம்சரணடைந்தவர்கள், மறுபயிற்சி எடுக்கவும் அக்குழு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
எம்.23 போராளிக் குழுவுக்கு வழங்கி வரும் ஆதரவை ஒப்புக்கொள்ள ருவாண்டா அரசாங்கம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேவேளையில் சுதந்திர அமைப்புகள் பலவும்ஐ.நாவும் எம்.23 போராளிக் குழுவுக்கும் ருவாண்டா அரசாங்கத்துக்கும் உள்ள நெருங்கிய உறவை ஆதாரங்களுடன் நிரூப்பித்துள்ளன. 2024 இறுதியில் அங்கோலா நாட்டின் முன்னெடுப்பில் நடைபெற்ற மும்முனை பேச்சுவார்த்தையில் ருவாண்டா கலந்துகொள்ள மறுத்தது, அதன் உண்மையான அக்கறை டுட்சி இன மக்களின் நலன் இல்லை, மாறாக, காங்கோவின் கனிம வளங்களைக் கைப்பற்றுவதன் மூலம் கிடைக்கும் பொருளாதார ஆதாயம்தான் என்ற சந்தேகம் வலுப்பெறக் காரணமாக அமைந்தது. எம்.23 குழு தனது இலக்காக காங்கோ தலைநகர் கின்ஷாஷாவை அறிவித்து தற்போது அதை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறது. காங்கோ நாட்டின் அதிகாரத்தினைகைப்பற்றுவதன் மூலம், டுட்சி இன மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், காங்கோவில்நிலவி வரும் ஊழல் மலிந்த மோசமான ஆட்சியை மாற்றி நல்லாட்சிதருவதுமே அதன் இலட்சியமாக அக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது, காங்கோ நாட்டில் நிலைபெற்றுள்ள தென்ஆப்ரிக்கப் படைகளை திரும்ப அழைத்துக்கொள்வதாக அந்நாட்டு அரசுகள் தற்போது அறிவித்துள்ளன. போரை முடிவுக்குக் கொண்டுவரவும், காங்கோ அரசுக்கும், எம்.23 போராளிக்குழுக்களுக்கும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும், கிழக்கு ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பும், தென் ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பும் முயன்று வருகின்றன. ஆனால், காங்கோவில், எம்.23 குழுவுடன் சமரசம் செய்து கொள்வது, ருவாண்டாவுக்கு அடிபணிவதாக மாறிவிடும் என்ற எண்ணம் நிலவிவருகிறது. மேலும், இந்த நிகழ்வுகள், காங்கோ மக்களுக்கு இரண்டாம் காங்கோயுத்தத்தை நினைவுபடுத்துவதாக பலர் தெரிவிக்கின்றனர். தலைநகரிலிருந்து சுமார் 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகாவு மற்றும் கோமா பகுதி மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். இதுவரை நடைபெற்ற சண்டையில் சுமார் 7000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் 450000 மக்கள் அண்டை நாடுகளுக்கும், உள்நாட்டுக்குள்ளேயும் இடம் பெயர்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ருவாண்டாவுக்கும், காங்கோவுக்குமிடையிலான சிக்கல்கள், கனிம வளம் நிறைந்த கிழக்கு காங்கோவில் பெருமளவு முதலீடு செய்துள்ளசீனா உள்ளிட்ட வல்லர்சுகளின் நகர்வுகள், எம்.23 உள்ளிட்ட குழுக்களின் தோற்றத்துக்கான காரணமும் விரிவாக அடுத்துவரும் கட்டுரைகளில் ஆராயலாம்.