சங்பரிவார பாஜக இந்துத்துவ வெறியர்களால் சூறையாடப்படும் மணிப்பூர் குக்கி நாகா இன மக்கள் பக்கம் நிற்போம் – வ. ரமணி
வன்முறைக்குக் காரணமான மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் பைரேன் சிங், பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும்
கடந்த 60 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர் மாநிலம். பாஜக அரச பயங்கரவாதத்தால் குக்கி இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மெய்த்தி இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டு குக்கி கிறித்தவ மக்களுக்கு எதிரான மதமோதலை தூண்டி வன்முறைக்கு வித்திட்டது பாஜக அரசு.
ஆனால், பெரும்பான்மையினர் கிறித்தவர்களாக உள்ள குக்கி நாகா பழங்குடி மக்கள் தான் வன்முறை செய்கிறார்கள் என்ற தோற்றத்தை விதைக்கிறது பாஜக ஆதரவு ஊடகங்கள்..
ஆனால் இன்றுவரை அங்கு வன்முறை தாக்குதலை நடத்துவதும் வீடுகளை தேவாலயங்களை சூறையாடுவதும் குக்கி நாகா இன கிறித்தவ மக்களை கொல்வதும் யார் என்பது குறித்து விவாதமாகவில்லை.
இந்த வன்முறைக்கு பின்னுள்ள சங்பரிவார கும்பலான #அரம்பை தெங்கால், #மெய்தி லீபன் போன்ற வன்முறை அமைப்புதான் இந்த கலவரத்தை தூண்டியுள்ளது. கருப்பு உடை அணிந்த இந்த சங்பரிவார கும்பல், மெய்தி இனத்தை தூண்டிவிட்டு நடக்கும் கலவரம். இதன் உச்சகட்ட கொடூரமாக இரண்டு குக்கி இன பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள வீடியோ இன்று நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒரு வீடியோ வெளிவந்துள்ளது ஆனால் இன்னும் பல பாலியல் பலாத்கார கொடூரங்கள் நடந்துள்ளன. அவை வெளிவரவில்லை.
இந்த வன்முறைக்கு முன்பே மாநில பாஜக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இணையதள சேவையை முடக்கியது. ஆக அங்கு நடக்கும் எந்த சம்பவமும் வெளியில் வந்துவிடக் கூடாது என்று திட்டமிடப்பட்டு நடந்த வன்முறை.
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல, பாஜக மோடி அரசு 60 நாட்களுக்கும் மேலாக நடக்கும் இந்துத்துவ கும்பலின் வன்முறையை படுகொலையை வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்தது. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய சூழலில் தற்போது நாடாளுமன்றம் கூடுகின்ற நிலையில் மணிப்பூர் கலவரம் குறித்து திருவாய் மலர்ந்தார் மோடி. நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு பேசுவதும் ஒரு நாடகமே.
பாஜகவின் நோக்கமே குக்கி இன மக்களை அவர்கள் வாழும் பள்ளத்தாக்குகள் மலைப்பகுதி நிலங்களிலிருந்து அவர்களை அப்புறப்படுததி நிலங்களை கைப்பற்றுவதே இந்த வன்முறையின் முக்கிய நோக்கம்.
நில அளவைக்கு அனுமதிக்காமலும் தங்களுக்கான தன்னாட்சி அதிகாரத்தைக் கோரி வருகிறார்கள் குக்கி நாகா மக்கள். அதற்கான தொடர் போராட்டத்தை பல ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
குக்கி பழங்குடி கிறித்தவ மக்கள் காஷ்மீர் போன்று மலைப்பகுதிகளில் சிறப்பு அந்தஸ்து பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் நிலப்பகுதியில் வேறு யாரும் குடியேற முடியாது. அங்கு நிலத்தை வாங்க முடியாது. காஷ்மீரில் இஸ்லாமிய மக்களின் சிறப்பு அதிகார சட்டப் பிரிவை எப்படி பாஜக பாசிச மோடி அரசு உடைத்ததோ அது போன்று குக்கி பழங்குடி மக்களின் 371சி சிறப்புப் பிரிவையும் உடைக்க துடிக்கிறது.
குக்கி பழங்குடி கிறித்தவ மக்களின் போராட்டம் என்பது நில உரிமைக்கான போராடடம். அதனை அபகரிக்கும் கார்பரேட் அதானி மோடி கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டம். இதனை மறைக்கிறது பாஜக ஆதரவு கும்பல். ‘பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்’ என்பதன் இரத்த சாட்சியமாக இன்று மணிப்பூர் நேற்று குஜராத், முசாபர் நகர், டெல்லி என்று தொடர்கிறது. அவற்றிலும் பெண்களை பலாத்காரம் செய்வதில் பாஜக ஆர் எஸ் எஸ் அமைச்சர் முதல் கீழ்மட்ட ஊழியர் வரை முதலிடத்தில் இருப்பது சங்கி கும்பல்களே என்பதற்கு உதாரணம் கீழ் கண்ட சாட்சிகளே
2002ல்
குஜராத் இஸ்லாமியர் இனப்படுகொலையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார் இஸ்லாமிய பெண் பில்கிஸ் பானு. அண்மையில் உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்தது.
2016 கயர்லாஞ்சியில் பெண்களும் குடும்பமும் நிர்வாணமாக்கபட்டு ஊர்வலமாக இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட கொடூரம்
2017 ல் உபி உன்னாவ் மாவட்டத்தில் 3 தலித் சிறுமிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம்
2018 காஷ்மீர் கத்துவாவில் 8வயது இஸ்லாமிய சிறுமி ஹாசிஃபா கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம்
2018 உபி ஹத்ராஸ் மாவட்டத்தில் 17 வயது தலித் சிறுமி பாலியல் படுகொலைக்கு உள்ளான கொடூரம் என்று பெண்களின் இரத்தங்கள் ராம ராஜியத்தின் இரத்த வாடை இந்தியா முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது.
2023 பாஜக எம் பி பிரிஜ் பூஜன் சரண்சிங்கின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தற்போது மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தொடர்கிறது.
இதுதான் காவி மோடி அமித்ஷா கும்பலின் ஆட்சி. இவ்வாறு கூட்டு பாலியல் படுகொலைகளுக்கும் காமப்பொருக்கிகளுக்கும் கொள்ளையர்களுக்கும் அடைக்களமாகவுள்ள பாஜக ஆட்சியின் மதவெறி வெறுப்பு முகத்தை கிழித்திடும் விதமாக குக்கி பழங்குடி மக்கள் போராடி வருகிறார்கள்.
நாம் அவர்கள் பக்கம் நிற்போம்.
பாசிச கும்பல் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
வெல்லட்டும் குக்கி நாகா மக்கள் போராட்டம்.. வீழட்டும் காவி மோடி ஆட்சி..
ரமணி
Aruvi1967@gamil.com