தருமபுரி நாய்க்கன்கொட்டாய் -அன்றும் இன்றும் ஆளும் வர்க்கம் பதறுவதேன்?

15 Sep 2018

செப் 12 மார்க்சிய லெனினிய தோழர்பாலனின் நினைவுநாள்.நினைவுநாளன்று தருமபுரி மாவட்டம்நாய்க்கன்கோட்டையில் உள்ள அவரதுசிலைக்கு வீரவணக்கம் செலுத்தசென்ற 80 பேர் மீது வழக்கு. அந்தநினைவு நாள் ஏற்பாட்டிற்காகசுவரொட்டி ஓட்டிய தோழர்கள் ரமணி,சித்தானந்தம், வேடியப்பன்,ராமசந்திரன் ஆகியோர் சிறையில்அடைப்பு. சிறையிலடைக்கப்பட்டஅனைவரும் மார்க்சியலெனினியர்கள்.

இந்தநாய்க்கன்கொட்டாயில் உள்ள நத்தம்,அண்ணாநகர், கொண்டாம்பட்டிகிராமங்களின் பெயர் தமிழ்நாட்டையேதிரும்பி பார்க்க வைத்தவை. கடந்த2000 ஆம் ஆண்டுவரை மார்க்சியலெனினிய அரசியல் செல்வாக்கில்இருந்து கடும் அடக்குமுறைகளைஎதிர்கொண்ட பகுதி இது. நாய்க்கன்கொட்டாயில் மூட்டப்பட்டசாதி தீ இன்றைக்கு வரைஅணையாமல் கனன்றுகொண்டிருக்கிறது. இளவரசன் -திவ்யா காதல் திருமணம் நடந்தது;சாதி ஆதிக்க கும்பலின் சாதிப்பஞ்சாயத்து நெருக்கடி; திவ்யாவின்தந்தை நாகராஜ் தற்கொலைசெய்தார்; 2012 நவம்பர் 7 – ரசியப்புரட்சி நாள் அன்று சாதி ஆதிக்கவெறியர்கள் மூன்று தலித்கிராமங்களை தீ மூட்டிசூறையாடியனர்; உயர்நீதிமன்றமேகட்டப்பஞ்சாயத்து செய்துஇணையர்களைப் பிரித்தது;இளவரசன் கொலை செய்யப்பட்டார்;நாடக காதல், தலித் அல்லாதோர்கூட்டமைப்பு என பா.ம.க.தலைமையிலான தலித் எதிர்ப்புஅரசியல், சாதி வாக்குகளை திரட்டிஅன்புமணி நாடாளுமன்ற உறுப்பினர்ஆனது என அடுத்தடுத்த அரசியல்நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன.

இளவரசனின் முதலாம் ஆண்டுநினைவு நாளுக்கான ஏற்பாடுகள்நடந்து கொண்டிருந்த நேரம் காவல்துறை. நத்தம் கிராமத்தை மிரட்டிஅச்சுறுத்தியதோடு 6 பேர் மீது தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்போட்டது! இளவரசன் புதைக்கப்பட்டஇடத்தை சுற்றி ஆயுதங்கள்எடுத்ததாகவும் மெரினா கடற்கரையில்அந்த கிராமத்து இளைஞர்கள் பயிற்சிஎடுத்ததாகவும் கேலிக்குரிய வகையில்வழ்க்குப் புனையப்பட்டிருந்தது.இன்னொரு புறம், நாய்க்கன்கொட்டாயில் பற்ற வைக்கப்பட்ட தீகோகுல்ராஜ் படுகொலை, சங்கர்படுகொலை என ஆணவக்கொலையின் அணி வரிசைகள்ஆயின. சாதிய வன்முறையைத்தூண்டிவிட்ட பா.ம.க. நாடாளுமன்றஉறுப்பினர் பதவியை 2014 இல் தட்டிசென்றது. இப்போது அதே கிராமத்தில் தோழர்பாலன் நினைவு நாளன்று நூற்றுக்கும்குறைவானோர் சில மணித்துளிகள்வந்து போனதற்கு வழக்கு தொடுத்துதடுக்க முனைகிறது காவல் துறை! ஆனால், அன்றைக்கு அதேகிராமத்தில் பல மணி நேரங்கள்நூற்றுக்கணக்க்னோர் செய்தவன்முறை வெறியாட்டத்தைக்காவல்துறை வேடிக்கைப் பார்த்தது.

ஒரே இடம், ஒரே காவல் துறை, ஒரேமக்கள் – ஒரு நிகழ்வுக்கு தடை,இன்னொரு நிகழ்வுக்குபட்டுக்கம்பளம். இந்த வேறுபட்டஅணுகுமுறை ஏன்? இந்தமண்டையைக் குடையும் கேள்விக்குநாய்க்கன்கோட்டையின் நாற்பதாண்டுகால வரலாற்றை திரும்பிப் பார்த்தாகவேண்டும். இன்றைக்கு சாதிகளாய்அணிதிரட்டப்பட்டிருக்கும்தலித்துகளும் பிற்படுத்தப்பட்டோரும்உழைக்கும் மக்களாய் அணிதிரட்டப்பட்ட காலத்தின் கதாநாயகன்தான் தோழர் பாலன். சாதிஅடையாளத்தை மறுத்த இளைஞர்கள்மா-லெ அரசியலை ஏந்தியபடி இரட்டைகுவளை ஒழிப்புக்கும் கந்துவட்டிக்கொடுமைக்கும் எதிராய் நின்ற காலம்.பண்ணயடிமைத்தனத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் பணியில் நக்சல்பாரித் தோழர்கள் ஈடுபட்டிருந்த காலம். சாதி வெறியர்கள்தலையெடுத்தால் தலை தப்பாதுஎன்றிருந்த காலம். உழைக்கும் மக்கள்செங்கொடியின் கீழ் ஒன்றுபடக் கண்டுஆளும்வர்க்க அஞ்சிய காலம். சினிமாபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மாயவலைக்குள் தமிழக மக்கள்சிக்குண்டிருந்த காலம். அந்தவேடிக்கை மனிதர் காவல் நாய் தேவாரத்தின் தலைமையில் நிஜபுரட்சியாளர்களை வேட்டையாடியகாலம். மக்கள் கூடி நின்றவொரு பொதுக்கூட்ட மேடையில் இருந்ததோழர் பாலன் காவல்துறையால் கடத்திச் செல்லப்பட்டு அடித்துசித்திரவதை செய்யப்பட்டுகொல்லப்பட்டார்.

இன்றைக்கு அதே உழைக்கும் மக்கள்சாதிகளாய் பிரிந்து நிற்கின்றனர். தனித்தனியாய் தங்கள் சாதி அடையாளங்களுடன்ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள்.ஆனால், ஆளும்வர்க்கம் அப்படிஅவர்கள் திரள்வது கண்டுஅஞ்சுவதில்லை. எதற்காகதிரட்டப்படுகிறது மக்கள் சக்திஎன்பதே அணுகுமுறையைத்தீர்மானிக்கும் காரணியாகிறது. அளவுசிறிதா, பெரிதா என்பதை விட பண்பேஇங்கு முதன்மையானது. ”புரட்சிக்காகமக்கள் சக்தி திரட்டப்பட்டுவிடக்கூடாது. அதை முளையிலேயே கிள்ளிஎறிய வேண்டும். முதல் அடியிலேயேமுற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.”என்பதில் ஆளும்வர்க்கம் குறியாய்இருக்கிறது. ஆளும்வர்க்கத்தின் கையில் இருக்கும்அரசைத் தூக்கியெறிந்து உழைக்கும்வர்ககம் அரசஅதிகாரத்தைவென்றெடுக்க வேண்டும் என்றஅரசியலைவிட ஆளும்வர்க்கம் கண்டுஅஞ்சும் அரசியல் வேறெதுவும்இல்லை. அரசு என்பது ஓர்அடக்குமுறை கருவி, பழம் நழுவிபாலில் விழுவது போல்வாக்குச்சாவடியின் வழியேஉழைக்கும் மக்களின் கையில்அரசியல் அதிகாரத்தை கொடுத்துவிடுவதற்காஆயிரக்கணக்கான கோடிகளைச்செலவு செய்து இராணுவம், போலீஸ்,சிறைச்சாலைகளை வைத்திருக்கிறதுஆளும் வர்க்கம்? என்ற கேள்வியைஎழுப்புகிறது மார்க்சிய லெனினியஅரசியல். அந்த அரசியல் ஆளும்வர்க்கத்தின் தூக்கம் கெடுக்கிறது. நாய்க்கன்கொட்டாய் இந்த அரசுஎந்திரத்தின் மேலிருக்கும் வண்ணப்பூச்சுகளை ஊடுருவி அதன்உள்ளடக்கத்தைக் காண ஒளிப்பாய்ச்சுகிறது.

படுகொலைசெய்யப்பட்ட தோழர் பாலனின்நினைவுகளை அழிக்க முடியாமல்அல்லாடுகிறது அரசு. ஏனெனில்புரட்சியாளர்களைப் படுகொலைசெய்வதால் புரட்சிக்கு நிரந்தர தடைஏற்படுத்த முடிவதில்லை. அதைதள்ளிப் போடத்தான் முடிகிறது. அதுபோல் அவர்கள் சிறையில்அடைக்கப்படலாம் ஆனால் அவர்தம்அரசியலை சிறைபோட முடியுமா? இந்த கைதுகள் மக்களின்மனங்களில் தீ மூட்டிக்கொண்டிருக்கிறது! நிலம் அதிரும்காலம் ஒன்றை நோக்கி வரலாறுநடைபோட்டுக் கொண்டிருப்பதைஆளும்வர்க்கம் உணருவதில்லை

– செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW