புதுக்கோட்டை பாடகர் பிரகாஷ் மீதான சாதிய கொலைவெறி தாக்குதல் – கள அறிக்கை
கடந்த நவம்பர் 12.11.23 தீபாவளி தினத்தன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆயப்பட்டி அண்ணா நகர் கிராமத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் பாடகர் பிரகாஷ் (27) என்பவர் மீதான சாதிவெறி கொலைவெறித் தாக்குதலானது வன்கொடுமையின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது. ஆயப்பட்டி அருகே கீழ தொண்டைமான் ஊரணி...