கருத்து

தேசியக் கல்விக் கொள்கைக்கு அவசர ஒப்புதல் தருவதா? கல்விப்பறிப்புக் கொள்கையை அமலாக்காதே!

29 Jul 2020

–  தமிழ்த்தேச மக்கள் முன்னனியின் கண்டன அறிக்கை நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கொரோனா பேரிடர்  காலத்தில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் மோடியின் அமைச்சரவை இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவால் இரண்டாண்டுக்கு...

தென்காசி மாவட்டம், வாகைக்குளம் விவசாயி அணைக்கரை முத்துவை காவல் சித்திரவதை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்!

29 Jul 2020

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து (70) வனத்துறையினரால் 22.07.2020 அன்று இரவு சுமார் 11.00 மணியளவில் இழுத்துச் செல்லப்பட்டு, அன்று இரவு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார். அவரது விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்ததாக...

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) – நாம் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியதாக இருக்கும்

28 Jul 2020

கற்பனைக் கடவுளரைக் காக்க நம்மைத் துணைக்கழைத்து அரசியல் செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு, நம் கண்காணும் கடவுளான, மெய்யாகவே நம்மை வாழவைத்த, வாழவைக்கும் இயற்கை வளங்களை அழிக்கும் செயலைத் துல்லியமாக துணிச்சலாக முன்னெடுத்துச் செல்கிறது என்பதற்குப் புதிய சான்று,...

சட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு

25 Jul 2020

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வண்ணாதாங்கல் பகுதியில் ஷாலினி (35) க/பெ ஜானி பால்ராஜன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 9 வயதில் ஷெனிசால் என்ற பெண் குழந்தை உள்ளது. ஷாலினி சட்டம் படித்து வரும் மாணவி ஆவார். ஷாலினியின் கணவர்...

இந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 2

25 Jul 2020

இந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 1 1947 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மதமும் அரசும் ஐரோப்பாவில் கல்வி பயின்ற நேருவிற்கு இயல்பாகவே ஐரோப்பிய வரலாற்றில் நடைபெற்ற புரட்சிகர பொருள்முதல்வாத தத்துவத்தின் தாக்கம் இருந்தது. அதன் காரணமாக மத்திய...

இந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 1

24 Jul 2020

21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நாம் மதவாதத்திற்கு  எதிரான ஜனநாயகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். பெரும்பான்மை மதத்தை பின்பற்றுவோர்களது பிரதிநிதியாக அடையாளப்படுத்திக்கொண்டு உருவான மத நிறுவனங்கள், அமைப்புக்கள் (ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்துப் பரிட்சத் உள்ளிட்ட) மற்றும் கட்சியால் (பாஜக) சிறுபான்மை மக்கள்...

பாசிஸ்ட்களின் ஒடுக்குமுறையைக் கண்டிக்காமல் கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்துக் கொண்டிருந்தால் அதற்குப் பேர் என்ன?

23 Jul 2020

கந்தசஷ்டிக் கவசத்தையும் முருகனையும் இழிவுப்படுத்திவிட்டார்கள் என்ற பெயரில் கறுப்பர் கூட்டம் யூடியுப் சானலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களது அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் யூடியுப் சானலில் இருந்த 500 காணொளிகள் நீக்கப்பட்டுள்ளன. கறுப்பர் கூட்டத்தினரைக் குண்டர்...

தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி குண்டர்களின் தாக்குதலை கண்டிப்போம்! செய்தியாளர்கள் ஆசிப், குணசேகரன், செந்தில், கார்த்திகேயன், நெல்சன் ஆகியோருடன் துணைநிற்போம்!

21 Jul 2020

பிரதமர் மோடியை மையப்படுத்திய முதல் பக்க செய்தி வெளியிடாத காரணத்தால் ஆங்கில இந்து நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து சித்தார்த் வரதராஜன் தகுதி குறைப்பு செய்யப்படுகிறார். நிறுவனத்தின் தகுதி குறைப்பு நடவடிக்கைக்கு  கண்டனம் தெரிவித்து சித்தார்த்  ராஜினாமா செய்து வெளியேறுகிறார்.  அடுத்து, ஏபிபி...

கறுப்பர் கூட்டத்தினர் கைதுக்கு கண்டனம்! இந்துத்துவப் பாசிசத்திற்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுக! கைகழுவும் திமுக, காட்டிக்கொடுக்கும் பாமக!

20 Jul 2020

கறுப்பர் கூட்டத்தினரின் கைதுக்கு கண்டனம்: இதுவரை கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். திநகர் கண்ணம்மாப்பேட்டையில் உள்ள அவர்களது அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கடவுள் முருகனை இழிவுப்படுத்தி விட்டதாகவும் அதனால் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு...

ஓ பாசிஸ்டுகளே ! வரவரராவ், சாய்பாபாவை கொல்லப்போகிறீர்களா?

19 Jul 2020

மக்கள் உரிமைக்களத்தில் சமரசமில்லா போராளிகளான புரட்சிகர எழுத்தாளர்கள், கவிஞர்கள் கருத்தியல் செயல்பாட்டாளர்களை கைதுசெய்தால் மனித உரிமைக்களம் வெறுமையாகிவிடுமா? எதிர்ப்புக்குரல்கள் ஊமையாகிவிடுமா?   வலிமையான கட்சி, வலுவான தலைமையென பீற்றிக்கொள்கிறீர்களே? பிறகெதற்கு 80 வயது முதிய தோழர் வரவரராவைக் கண்டு அச்சப்படுகிறீர்? மாற்றுத்திறனாளி...

1 19 20 21 22 23 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW