நவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்!

11 Oct 2020

அன்பிற்குரிய தோழர்களுக்கு வணக்கம்.

தமிழகம்  மொழிவழி  மாநிலமாக தோற்றம் பெற்ற நாளை, தமிழக நாள் உரிமை முழக்க நிகழ்வாக, தமிழ்த்தேச மக்கள் முன்னணி நவம்பர் 1 அன்று முன்னெடுக்கவிருக்கிறது.

மொழிவழி மாநிலமாக தமிழகம் தோற்றம் பெற்ற நாளை, உரிமை கிளர்ச்சி நாளாக முன்னெடுக்கும் நோக்கோடு, இந்நிகழ்வு நடத்தப்படுகிறது .

காவி கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரம், மோடியின் சிறு கும்பல் ஒற்றை மைய அதிகாரத்தின் ஊடாக, வளர்ந்துவரும் சூழலில் தமிழகம் பெற்றிருந்த, போராடி நிலைநிறுத்தி இருந்த, அரைகுறை அரசியல் உரிமைகள் கூட பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது, அது மொழி, கல்வி, வேலைவாய்ப்பு உரிமை சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, அரசியலிலே தீர்மானிக்கும் சட்டமியற்றும் உரிமை தொடங்கி, நிதி, பொருளாதாரம், பண்பாடு, நிலம், நீர் என அனைத்திலும் தமிழ் மக்களின் உரிமைகள், தமிழ் தேசத்தின் உரிமைகள் பறிபோய் கொண்டிருக்கின்றன, இனிமேலும் இது தொடர்ந்தால், நாம் அனுமதித்தால், மொழிவழி மாநில சட்டமன்றம் அமைந்த நாளில் கிடைக்க பெற்றவைகளை கூட நாம் இழந்து, தமிழ் தமிழர் தமிழகம் என்ற தேசிய இனத்தின் வரலாற்று வளர்ச்சிப் போக்கு முற்றாக அழித்தொழிக்கப்படும்.

ஆகவே நவம்பர் 1 மொழிவழி மாநில தோற்ற நாளை, காவி கார்ப்பரேட்  பாசிச ஒற்றை மைய அதிகாரத்திற்கு எதிராக, தமிழக உரிமை நாளாக கிளர்ச்சி நாளாக அனுசரிக்க தமிழ் மக்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுத்து, தமிழ்த்தேச மக்கள் முன்னணி தொடர் பரப்புரை இயக்கத்தை, நவம்பர் 1 அன்று நான்கு மண்டலங்களில் ஒன்றுகூடல் நிகழ்வை முன்னெடுக்கிறது, அதில்  அனைவரும் பங்கு பெறுமாறும்,  கீழ் வரும் தமிழக உரிமை நாள் முழக்கத்தை எழுப்புமாறும் பரப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

  • தமிழ்நாட்டு அரசுரிமை தமிழருக்கே! – நாணயம், பாதுகாப்பு, வெளியுறவு தவிர்த்த பிற விவகாரங்களில் சட்டமியற்றும் உரிமை தமிழக சட்டமன்றத்திற்கே!
  • தமிழ்நாட்டுப் பொருளியல் உரிமை தமிழருக்கே! – தமிழ்நாட்டின் மூலதனம், தொழில், சந்தை, வணிகத்தைக் கைப்பற்றத் துடிக்கும் மார்வாடி, பனியா முதலாளிகளே, ரிலையன்ஸ் உள்ளிட்ட அந்நிய நிறுவனங்களே வெளியேறு! 
  • தமிழ்நாட்டு வேலையுரிமை தமிழருக்கே! – ஒப்பந்த முறையை ஒழித்திடு! சமவேலைக்கு சம ஊதியம், மைய மாநில அரசுப் பணிகள், தனியார் நிறுவனப் பணிகள், தமிழ் படித்த தமிழ்நாட்டு மக்களுக்கே! என முழங்குவோம்.

தோழமையுடன்

பாலன், பொதுச்செயலாளர்,

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW