சூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்!

03 Jul 2020

கொரோனா கால நெருக்கடியைச் சுட்டி உழைக்கும் மக்கள் மீதான முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அரசின் மிக அபாயகரமான தாக்குதலை எதிர்த்தும் கடும்  வாழ்வாதார நெருக்கடியில் உள்ள உழைக்கும் மக்களின் நிலையினை அலட்சியத்துடன் கையாளும் அரசினை எதிர்த்தும்

சூலை 3 அன்று நடக்கும் அகில இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வோம் !!

ஆர்ப்பாட்டங்களை நீடித்த, போர் குணமிக்க மற்றும் தீர்க்கமான உழைக்கும் வர்க்க போராட்டமாக மாற்றுவோம் !

தற்போதுள்ள கொரோனா நெருக்கடியும் முறையான திட்டமிடல் ஏதும் இல்லாது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கும் ஒன்றை மிகத் தெளிவாக்கியுள்ளது, ஆளும் வர்க்கத்திற்கு  உழைக்கும் வர்க்கத்தின் துன்பத்தைக் கண்டு எந்த வித கவலையுமில்லை. மாறாக, அவர்கள் இந்த நெருக்கடி காலக்கட்டத்தை “வாய்ப்பாக” பயன்படுத்தி உழைக்கும் மக்களை மேலும் சுரண்டல்-ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிறார்கள். மார்ச் 24 அன்று வெறும் 4 மணி நேரம் கெடுவுடன் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு தொடங்கியதிலிருந்து உழைக்கும் மக்கள், குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையான பசி-வேலைவாய்ப்பின்மை மற்றும் வாழ்வாதார நெருக்கடியினால் அல்லலுற்று வருகின்றனர். முதலாளிகள் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதை விரும்பவில்லை. எனவே வெகு நாட்களாக அவர்களை ஊர் திரும்ப விடாது கொத்தடிமைகள் போன்று நடத்தியது அரசு. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பல்லாயிரம் மைல் தூரம் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சில நூறு தொழிலாலாளர்கள் போகும் வழியில் இறந்தனர்.பின்னர், அவர்கள் ஊர் திரும்ப ரயில்கள் ஏற்பாடு செய்த போது, இரயில் கட்டணத்தை கூட வசூலித்து உள்ளனர்.

தொழிலாளர்கள் சென்ற சில இரயிலோ வழி தவறி வேறு எங்கோ சென்றது. இந்நாட்டின் அரசோ, முதலாளி வர்க்கத்தை குறிப்பாக அம்பானி-அதானியை  திருப்தி படுத்துவதில் கவனம் செலுத்தியது. 20 லட்சம் கோடி நிதி தொகுப்பை முதலாளிகளை திருப்திபடுத்தும் விதமாகவே அறிவித்துள்ளது. பல கோடி உழைக்கும் மக்கள் எவ்வாறு இந்த ஊரடங்கை எதிர் கொள்கின்றனர் எவ்வாறு உணவு உட்கொள்கின்றனர் என்பதை பற்றி எந்தவித கவலையும் கொள்ளவிலை அரசு. மாறாக, தனியார்மயம் முன்னெடுப்புகள் தீவிரம் அடைந்தது. எல்லவற்றிற்கும் மேலாக உழைக்கும் வர்க்கத்தின் கடும் போராட்டத்திற்கு பின் வென்ற தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்பப் பெறவும் , நீர்த்துப் போகச் செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 12 மணி நேர வேலை, 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கி 4 சட்டங்களாக மாற்றியது, சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் வேலை நிறுத்த உரிமையை குறி வைத்தது, fixed term employment என தொழிலாளர் நலச் சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. சில மாநிலங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக பல தொழிலாலாளர் நலச் சட்டங்கள் சில வருடங்களுக்கு செல்லாது என்று அறிவித்துள்ளது. வருங்கால வாய்ப்பு நிதி (PF) குறைக்கப்பட்டுள்ளது.DA  மற்றும் DR ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசும் உச்ச நீதிமன்றமும்  தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் விவகாரத்தில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது.

தற்போது அரசால் ஊரடங்கு தளர்த்தப்படுவதும் கூட முதலாளிகளின் தேவைக்கு ஏற்பவே நடக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை விரும்பியபடி குறைக்கவும் தேவைப்பட்டால் பணி நீக்கம் செய்யவும் கட்டற்ற சுதாதிரம் வழங்கப்பட்டுள்ளது. PM Cares நிதிக்கு கோடிக்கணக்கில் நிதி அளித்த நிறுவனங்கள் நிதி பற்றாக்குறையை சுட்டிக் காட்டி தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை தர மறுக்கின்றன. இந்த கொரோனா கால நெருக்கடி சூழலில், சுகாதார வசதிகளோ  சமூக பாதுகாப்போ இல்லாத சூழலில் வேலையின்மையும் அதிகரித்து வரும் சூழலில் உழைக்கும் மக்கள் கடும் வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

இத்தகையதொரு சூழலில் மக்களின் நெருக்கடிக்கு தீர்வு காணவோ நிவாரணம் வழங்கவோ முற்படாமல் அரசாங்கமோ மக்களின் சனநாயக உரிமைகளை பறிப்பதில் மும்முரமாக உள்ளது. அரசின் இந்த போக்கிற்கு எதிராக குரல் எழுப்புபவர்களை தேச விரோதி என்று முத்திரை குத்தி சிலரை சிறையிலும் அடைக்கிறது. CAA எதிர்ப்பு போராளிகளை விடுவிக்கக் கோரி ஐநா மனித உரிமை ஆணையம் உட்பட பல சர்வதேச அமைப்புகள் குரல் எழுப்பியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. மறுபுறம், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக போர் என்று ஒரு தீவிர தேசியவாத சூழல் உருவாக்கப்படுகிறது. இத்தகைய போர் சூழலில் மடிபவர்கள் உழைக்கும் வர்க்க மற்றும் விவசாய குடும்பங்களிலிருந்து வருபவர்கள் என்பதை நாம் அறிவோம்.போரின் பொருளாதாரச் சுமை உழைக்கும் வர்க்கத்தின் மீதும் அதன் இலாபத்தை  முதலாளிகளும் அனுபவித்து வருகின்றனர். உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவான சனநாயக குரல்கள் போர் சூழலை காரணம் சுட்டி அமைதியாக்கப்படுகின்றன.

 

இத்தகையதொரு சூழலில், மசா ( MASA) தொழிற்சங்கம் அரசுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறது. அரசு உழைக்கும் மக்களுக்கு சுகாதார வசதியினை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் உழைக்கும் மக்கள் தெருக்களில் இறங்கி போர்க்குணமிக்க போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.

அரசாங்கத்தின் தொழிலாளர் எதிர்ப்பு மற்றும் பாசிச தாக்குதல்களுக்கு எதிராக, மத்திய தொழிற்சங்கங்கள் சூலை 3 அன்று அகில இந்திய அளவிலான போராட்டத்தையும்  அதன் பின்னர் 6 மாத காலத்திற்கு ஒத்துழையாமை இயக்கதையும் முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. எங்களின் கருத்துபடி, தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அடையாளப் பூர்வ போராட்டங்களைக் கடந்து மேலும் நீடித்த, போர்க்குணமிக்க மற்றும் தீர்க்கமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் ஒரு தீவிர பொருளாதார மற்றும் அரசியல் போராட்டத்தை  இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு எதிராகவும் அரசின் நவதாரளவாத கொள்கைகளுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களின் நலனுக்காக முன்னெடுக்க வேண்டியுள்ளது. சூலை 3, 2020 அன்று நடக்கும் அகில இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மாசா தீவிரமாக ஆதரிக்கிறது. மேலும் இதை நீடித்த, போர்க்குணமிக்க தீர்க்கமான போராட்டமாக மாற்ற உறுதி பூண்டுள்ளது.

 

மசா (MASA) தனது உடனடி கோரிக்கைகளாக கீழ் வருவனவற்றை முன் வைத்துள்ளது.

  • எல்லா தொழிலாளர்களுக்கும் ஊரடங்கு காலம் முழுமைக்கும் சேர்த்து முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஊரடங்கு காலத்தில் சம்பாதிக்க முடியாமல் போனவர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு மாதம் 10 ஆயிரம் வீதம் வழங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்பினையும் உறுதி செய்திட வேண்டும்.
  • தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர் எதிர்ப்பு திருத்தங்கள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.பல்வேறு மாநிலங்கள் எடுத்த முடிவுகளான 12 மணி நேர வேலை, DA மற்றும் DR நிறுத்தியது, PF தொகையினை குறைத்தது போன்றவற்றை திரும்பப் பெற வேண்டும்.
  • அனைத்து கொரோனா சோதனைகளையும் இலவசமாக்க வேண்டும். கொரோனா பாதிப்புக்கு உள்ளான அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி மறுத்துவத்துறையை தேசியமயமாக்க வேண்டும்.
  • வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு பொருளாதார உதவியுடன், போதுமான தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வசதிகளையும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்களை 100 நாள் வேலை திட்டத்தில் சேர்த்து, ஊதியத்தை உயர்த்திக் கொடுத்து 100 நாள் வேலையினை உறுதி செய்ய வேண்டும். நகர்புற தொழிலாளர்களுக்கும் இதை போன்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
  • அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சஃபாய் கர்மசாரிகளுக்கும்(Safai Karmcharis) போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும். அங்கன்வாடி, மத்திய சத்துணவு திட்ட ஊழியர்கள், ஆஷா (ASHA) ஆகியோரை ஊழியர்களாக பாவித்து உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
  • கொரோனா நெருக்கடியின் பேரில் நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணிநீக்கம் மற்றும் சம்பளக் குறைப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • நடந்துகொண்டிருக்கும் தனியார்மயமாக்கல் மற்றும் ஊழியர்களை ஒப்பந்தமயமாக்கல் மற்றும் முறைசாரா தொழிலாளர்களாக ஆக்குவதை உடனடியாக நிறுத்துங்கள்
  • சனநாயக கருத்தூரிமைக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை , போர் கூப் பாடுகளை ( War mongering) , உழைக்கும் வர்க்கத்தினரை சாதி,மத,இன வெறுப்புணர்ச்சியை தூண்டி பிரிக்க முயல்வதை நிறுத்த வேண்டும். UAPA போன்ற கொடுஞ்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

 

 

சோசலிச தொழிலாளர் மையம்MASA

9940963131 / 9994094700

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW