பசியினால் வாடும் ஏழைகளுக்கு அரசு என்ன செய்யும் ? புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப என்ன வழி ? சிறு குறு தொழில்கள் எப்படி பாதுகாக்கப்படும் ? – பிரதமர் மோடியின் இன்றைய உரையில் பேசத்தவறியவை….

14 Apr 2020

பிரதமர் நரேந்திர மோடி இன்று  மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி, மே-3 வரை ஊரடங்கை நீட்டித்திருப்பதாகவும், மக்கள் ஒத்துழைப்புக் கொடுத்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் மக்களிடம் தெரிவித்துள்ளார். வெறும் நான்கு மணிநேர அவகாசத்துடன்  மார்ச் 25 ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகத் தொடங்கிய  ஊரடங்கினை மேலும்  நீட்டித்தும், ஏப்ரல் 20 வரை இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். ஏப்ரல் 20க்குப் பிறகு கொரோனா ஆபத்து  இல்லாத பகுதிகளுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து ஆலோசிப்பதாகக் கூறியுள்ளார்.

 

கொரோனா வைரஸ் நெருக்கடி பற்றி உரையாற்றப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நான்கு வாரங்களாகத் தொலைக்காட்சி வாயிலாகவும், வானொலி வாயிலாகவும் மக்கள்முன் தோன்றியுள்ளார். இந்த உரைகளில் பெரும்பாலானவற்றின் மோடி, சமூக விலக்கம் கடைப்பிடித்தல், கைதட்டுதல், விளக்கு ஏற்றுவது, விளக்கு அணைப்பது என மக்கள் என்ன செய்யவேண்டும் என்று உரையாற்றியுள்ளாரேத்  தவிர மக்களுக்கு அரசு என்ன செய்துள்ளது என்றோ, செய்யத்திட்டமிட்டிருக்கிறது என்றோ கூறியது இல்லை. (https://scroll.in/article/956701/modi-explained-what-we-must-do-about-coronavirus-now-he-should-say-what-government-is-doing-for-us) . ஏப்ரல் 14, செவ்வாயன்று மோடி மக்களுக்கு ஆற்றிய உரையும் மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றித்தான்.

 

போதிய உணவு இல்லாமலும், குடும்பத்திலிருந்து வெகுதொலைவில் ஆதரவு இல்லாமலும், வாழ்வாதாரத்தைப்பற்றியும் மக்கள் இந்த

முழு ஊரடங்கால் சந்திக்கும் துன்பங்களை பற்றியும் இப்போதுதான் ஒப்புக் கொள்ளத்  தொடங்கிஇருக்கிறார் மோடி. துன்பத்தில் வாடும் இந்த மக்களுக்கு மோடி சொல்லும் பதில், “உங்கள் தியாகத்திற்கு முன்னால், நான் உங்களிடம் தலை வணங்குகிறேன்“.

 

தனது முந்தைய அறிவிப்புகளில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றி மோடி பேசவில்லை. ஊரடங்கை அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவுக்காகவும், சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமலும் துன்பப்பட்டனர். ஏழை மக்கள் பசிக்கும், காவல்துறையின் அடக்குமுறைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்கள். அப்போது தோன்றிய மோடி  `மக்கள் தங்கள் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்திகளை ஒளிரச் செய்யவும்` என்று அறிவித்தார் (https://scroll.in/article/958087/next-well-have-to-do-a-rangoli-contest-modis-candle-lighting-plan-invites-jokes-and-anger).

 

நெருக்கடியான நேரத்தில் மக்களை ஒன்றிணைக்க இது ஒரு பயனுள்ளப் பயிற்சியாகக் கூடத் தொடங்கியிருக்கலாம். ஆனால் பிரதமர் உரையில்  இது போன்ற குறியீட்டு நடவடிக்கைகள் இருப்பதாலும்,  நாடு முழுவதும் ஊரடங்கினை அறிவிப்பதற்காக அரசு கொடுத்த காலக்கெடுவை விட அதிகமாக, மெழுகுவர்த்தி-விளக்குகள் ஏற்றவும், பாத்திரங்களைக் கொண்டு ஒலி எழுப்பவும்  கொடுக்கப்படும்போது, அது கிட்டத்தட்ட கேலிக்கூத்தாகத் தெரிகிறது.

 

அரசாங்கம் தன்னால்  இயன்ற அளவு சிறப்பாக செயல்படுகிறது என்று மக்களுக்குச் சொல்வது  மட்டும் போதுமானதாக இல்லை.

 

தற்போதைய உரையில் (ஏப்ரல் 14) , கடந்த சில வாரங்களாக அரசு எடுத்துவரும்  நடவடிக்கைகள் குறித்து மோடி குறிப்பிட்டுள்ளார். முதல்  கோவிட் -19 தொற்று இந்தியாவில் கண்டுபிடிப்பதற்கு முன்பே இந்தியா தனது தயாரிப்புகளைத் தொடங்கியது என்று அவர் கூறியுள்ளார். நெருக்கடி காலங்களில் மற்ற நாடுகளை விமர்சிப்பது நல்லதல்ல என்றும், பல வளர்ந்த நாடுகளை விட இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். கோவிட் -19 நோயாளிகளைச் சமாளிக்க இந்தியாவில் 1,00,000 படுக்கைகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன என்று மோடி கூறினார். ஏழைகளுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவிடம் (Pradhan Mantri Garib Kalyan Yojana) இருந்து நிவாரணம் கிடைப்பதாக அவர் வலியுறுத்தினார். அறுவடை காலம் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர அனுமதிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

 

ஆனால் இது போதுமானதாக இல்லை.

 

நெருக்கடியின் தொடக்கத்தில், அரசாங்கம் மக்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைக்கூறாமல், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்குச் சொல்வதில் பிரதமர் கவனம் செலுத்தியது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இந்தியாவின் முதல் கொரோனாத்  தொற்று ஜனவரி மாதத்தில் பதிவாகியுள்ளது, மூன்று வாரங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க, சுகாதாரத் தயாரிப்புகளை அதிகரிப்பதற்குத் தேவையான அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களில்  நாடு முழுவதுமான ஊரடங்கை அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பதை விளக்குவதே மக்களுக்கு உறுதியளிப்பதற்கான சிறந்த வழியாகும், இந்த காலகட்டத்தில் மக்கள் கண்மூடித்தனமான அரச வன்முறை, மிகப்பெரிய பொருளாதார இழப்பு, பசி மற்றும் ஏராளமான இறப்புகளைச் சந்தித்துள்ளனர்.

 

அதற்குப் பதிலாக மோடி, அரசாங்க நடவடிக்கை குறித்து மெச்சிக்கொண்டதோடு, நாட்டு மக்களுக்கு மேலும் ஏழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

 

பிரதமர் தனது உரையைத் தொடர்ந்து, வரும் வாரங்களில் எவையெவை அனுமதிக்கப்படும் என்பதற்கான வழிகாட்டுதல்களை அறிவிப்பதாகக் கூறினார். இந்த விதிகளைப் பின்பற்றவும், ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியை மக்கள் கடப்பதற்கும், அரசாங்கம் மக்களை மேலும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அந்த வழிகாட்டுதல்கள் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதை மோடி உறுதிப்படுத்த வேண்டும்:

 

  1. நாட்டின் பல்வேறு பகுதிகளில், தனது சொந்த மாநிலத்திற்குள்ளேயே அல்லது பிற மாநிலங்களிலோ தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர், தங்கள் வீட்டிற்கு செல்ல முடியுமா?

 

  1. அப்படி இல்லையென்றால், அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான திட்டம் என்ன?

 

  1. தங்குமிடங்கள் சுகாதாரமற்றவையாகவும் அல்லது அடிப்படை வசதியற்றதாகவும் இருந்தால் அவர்கள் என்ன செய்வது?

 

  1. கண்மூடித்தனமாக வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு காவல்துறைக்கு அறிவுறுத்துமா ?

 

  1. தேவைப்படும் மாநிலங்களுக்கு உணவுப் பொருட்களைத் தடையின்றி கொடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யுமா?

 

  1. சேமிப்புக்கிடங்குகளில் கிடக்கும் அதிகப்படியான உணவுப்பொருட்களை மத்திய அரசு விநியோகிக்க ஏற்பாடு செய்யுமா?

 

  1. ஏற்கனவே நிலுவையில் உள்ள மாநிலங்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக கொடுக்குமா? (https://www.bloombergquint.com/gst/centre-still-owes-states-over-rs-30000-crore-in-gst-dues-for-fy20)
  2. நெருக்கடியை முன்னிலையிலிருந்து சமாளிக்கும் மாநிலங்களுக்கு மதித்த அரசின் நிதியைக் கொடுக்குமா?  (https://scroll.in/article/958297/give-money-to-states-the-single-most-effective-thing-modi-could-do-to-fight-covid-19)

 

  1. எளிதாக மற்றும் வேகமாக மாநிலங்கள் கடன் பெறுவதற்கு மத்திய அரசு வழிவகை செய்யுமா?

 

  1. சுகாதாரத் திறனை வலுப்படுத்த அரசாங்கம் என்ன செய்துள்ளது?

 

  1. சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு

உபகரணங்களின் தற்போதைய கணக்கு என்ன, விநியோகத்தை அதிகரிக்க அரசாங்கம் என்ன செய்துள்ளது?

 

  1. ஆர்டி-பி.சி.ஆர் (RT-PCR)  மற்றும் ஆன்டிபாடி, ஆகிய சோதனைகளைச் செய்வதற்கான கருவிகளின் தற்போதைய எண்ணிக்கை என்ன, மேலும் கொள்முதல் செய்வதற்கும் உற்பத்தி செய்வதற்கும் அரசாங்கம் என்ன செய்துள்ளது?

 

  1. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஆக்ஸிஜன் வழங்குவதற்கான வென்டிலேட்டர்கள் மற்றும் உபகரணங்களின் தற்போதைய எண்ணிக்கை என்ன, திறனை அதிகரிக்க அரசாங்கம் என்ன செய்துள்ளது?

 

  1. முடங்கிப்போன நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களுக்குத் தீர்வு காண அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது?

 

  1. தொழில்துறையை மீட்க அரசு பொருளாதார நிவாரணத் திட்டம் (stimulus package) வைத்துள்ளதா?

 

  1. வருமான உதவித் திட்டத்தை அரசாங்கம் திட்டமிடுகிறதா?

 

  1. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள தொகைகளுக்கு அப்பால் புதிதாக அல்லது கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டம் உள்ளதா?

 

  1. பொருளாதாரம் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்போது, சமூக விலகளைக் கடைப்பிடிக்க அரசாங்கம் தொழில்துறையுடன் இணைந்து செயல்பட்டுள்ளதா?

 

தமிழில்: ராதா

https://scroll.in/article/959118/income-support-stimulus-package-hunger-what-modi-did-not-address-in-his-speech-extending-lockdown

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW