கொரானாவைவிட கொடூரமான வைரஸ் ஆர்எஸ்எஸ்- பிஜேபி, மோடி -ஷா சதி கும்பல்!

01 Apr 2020

கொரானா கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தோல்வியை மூடிமறைக்க முஸ்லிம்களின் மீது பழிபோட்டு அவர்களை பலிகடாவாக்க முயற்சிக்கிறது காவி பயங்கரவாத கும்பல். டெல்லியில் மார்ச் மாதம் 8 தேதியிலிருந்து  தப்லீக் ஜமாஅத் என்ற இஸ்லாமிய சமுதாய அமைப்பு அவர்களுடைய வழக்கமான சமுதாய கடமை சார்ந்த நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி இருக்கிறார்கள்.  கொரோனா நோய் தொற்று நடவடிக்கையாக மார்ச் 22 ஆம் தேதியன்று முழுநாள் மக்கள் ஊரடங்கு என்று பிரதமர் அறிவித்ததிலிருந்து ஜமாத் தாரும் தங்கள் நிகழ்வுகளை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளனர். இதை தொடர்ந்து எவ்வித இடைவெளியும் இன்றி, தில்லி அரசு மார்ச் 23 இல் இருந்து மார்ச் 30 வரை ஊரடங்கு அறிவித்த நிலையில் அங்கிருந்து வெளியேறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் அவர்கள் கூடிய இடங்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர், இவ்வாறு அவர்கள் தங்கி இருப்பது குறித்தும் உடனடியாக அவர்கள் வெளியேறி அவர்கள் ஊருக்கு செல்வது குறித்தும் ஜமாத் நிர்வாகம் சார்பாக தில்லி அரசிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது, ஜனவரி மாதம் 28ஆம் தேதி இந்தியாவில் முதல் கொரானா தொற்று நோயாளியை கண்டறிந்துவிட்ட பிறகு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களைக் கண்டறிந்து  கொரோனா பரவலைத் தடுப்பதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய அரசும் தில்லி அரசும், தப்ளிக் ஜமாத் கூட்டத்திற்கு வருகை தந்த வெளிநாட்டவர்கள் வாயிலாக அந்தக் கூட்டத்தில் கூடியவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது  என்று பழிபோடுகிறது.

வெளிநாட்டில் இருந்து வருபவர்களைக் கண்காணிப்பதில் அசட்டையாக இருந்துவிட்டு இப்பொழுது மார்ச் 23ஆம் தேதி முதல்  தில்லி உத்தரவை பின்பற்றிய ஜமாத்தையும் ஜமாத் நிர்வாகத்தையும் இஸ்லாமியர்களையும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கி பலிகடா ஆக்குவது, ஒரு மதக் கூட்டம் தான் கொரானாவை பரப்பியது என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைப்பது அருவருக்கத்தக்க இந்துமதவெறி பாசிச சதிச்செயலாகும்.

கடந்த மூன்று நான்கு நாட்களாக புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் கொரானாவைவிட கடுமையாக மாறியுள்ள சூழலில், ஏழை தொழிலாளர்களை மோடியும் யோகியும் நடத்திய விதம் குறித்தும் அவர்களின் மோசமான திட்டமிடல் கையாலாகாத்தனம் குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ள சூழலில், அதற்கு பதிலடியாக அவர்கள் மக்களை விமர்சித்து போலீஸ் நிர்வாக வன்முறையை ஏவி வந்த சூழலில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இப்பொழுது முஸ்லிம்கள் விவகாரமாக  கொரானாவை மாற்றும் சதிச் செயலில் ஈடுபட்டு உள்ளார்கள்.

நாமெல்லாம் சமூக அக்கறையுடன் அனைத்து தரப்பும் இணைந்து நோயை எதிர்கொள்வதற்கு போராடிக் கொண்டிருக்கிற சூழலில், ஏழைத் தொழிலாளர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிற சூழலில் அவர்கள் நேற்று வழக்கம்போல ‘கொரானா ஜிகாத்’ என்ற முஸ்லீம் வெறுப்பு ட்விட்டர் ட்ரெண்டிங்கை பரப்பி இருக்கிறார்கள். மார்ச் 24ஆம் தேதி வரை பல்வேறு இந்துமதப் பண்டிகைகளுக்காகவும் கலை கலாச்சார நிகழ்ச்சிக்காகவும் மக்கள் கூடியிருக்கிறார்கள். இது குறித்து பல்வேறு புள்ளிவிவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன, ஏன் ராமர் கோயில் கட்டுவதற்கான பூஜையை மார்ச் 25 ஆம் தேதி யோகி ஆதித்யநாத் மேற்கொண்டிருக்கிறார், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு  ஊரைக்கூட்டி பிஜேபியின் சவுகான் முதல்வர் பதவியை ஏற்று இருக்கிறார். முறையாக திட்டமிடப்படாத ஊரடங்கால் மார்ச் 25, 26 தேதிகளில் இலட்சக்கணக்கான ஏழைத் தொழிலாளர்கள் டெல்லியில் கூட்டம் கூட்டமாக நின்றார்கள் இதைப்பற்றியெல்லாம் கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிற சங்கி கூட்டம் இப்பொழுது முஸ்லிம் வெறுப்பைத் தூண்டிவிடுகிறது, உத்தரவுக்கு கட்டுப்பட்டு கூட்டத்தை முடித்த முஸ்லிம்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தை தூண்டிவிடுகிறது. மருத்துவ அவசரகால நிலையை வழக்கம்போல முஸ்லிம்களை பலிகடாவாக்கி, தங்கள் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காக ஹிந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டி விடுவதற்காக ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கூட்டம் முயற்சிக்கும்.

10 கோடி ஏழை தொழிலாளர்கள், கிராமத்து விவசாயிகளை அருவெறுப்பாகவும் அசிங்கமாகவும் பார்த்து மோட்டார் வைத்து விஷமருந்து அடித்தக் கூட்டம், இந்த மக்கள் துயரத்திலும் கள்ளத்தனமாக வைத்த இராமர் சிலையை இடம் மாற்றி பூஜையை தொடங்கிய கூட்டம், இவர்கள் எஜமான் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆசியர்கள்தான் அமெரிக்காவுக்கு கொரானாவை கொண்டு வந்தார்கள் என தன் தோல்வியை மறைக்க இன வெறியை தூண்டியது போல இந்த கும்பல் கொரானாவை முஸ்லிம்கள் கொண்டு வந்தார்கள் என திசை திருப்ப முயற்சிக்கிறது. அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்தது போல் இங்கு மதவெறித் தாக்குதல் நடப்பதற்கு வழிவகுக்கும் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.

தமிழர்கள் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சங்கிகளின் அடிமை எடப்பாடி கும்பலும் இது மருத்துவ பிரச்சனைதான், அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லை எனக்கூறிவிட்டு தனது சுகாதார செயலாளரை விட்டு ஒரு மதக் குழுவின் பிரச்சனையாக மாற்ற முயற்சிக்கிறது. இது ஒரு கட்சியின், ஒரு அரசாங்கத்தின், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பிரச்சனை அல்ல, மக்கள் அனைவருடைய பிரச்சனை. அனைத்து தரப்பாரையும் கட்சியினரையும் இணைத்துகொண்ட தன்னார்வ நடவடிக்கைதான் கொரானா தாக்குதலிலிருந்து நம்மை காக்க முடியும். உண்மையிலேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு அக்கறை இருக்குமானால் அனைத்து கட்சியினரையும் சமுதாயத்தினரையும் இணைத்துக்கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அதைவிடுத்து ஆர்எஸ்எஸ்  பாசிச  மோடி கும்பலுக்கு சேவை செய்வது விபரீதம் ஆகவே முடியும் என அனைவரும் எச்சரிக்கைவிடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். எனவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கொரானாவை மட்டும் அல்ல, மனித துயரிலும் மத வெறியைத் தூண்டும் இரத்தவெறி பிடித்த ஆர்எஸ்எஸ் என்ற வைரஸையும்  ஒழித்தாக வேண்டும்.

 

பாலன்,

பொதுச்செயலாளர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST
1 comments

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW