குடியுரிமை சட்டத்திருத்தம் ‘பாகுபாட்டை’ அடிப்படையாகக் கொண்டுள்ளது – ஐ.நாவின் மனித உரிமைக்கான(OHCHR) உயர் ஆணையர் மைக்கேல் பக்லேட்

15 Dec 2019

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் 2019 (CAB)  அடிப்படையிலேயே பாகுபடுத்தலை நோக்கமாக கொண்டிருப்பதாகவும், சர்வதேச சட்டம் மற்றும்  இந்தியாவின் அமைப்பிற்கு புறம்பானது என்று ஐ.நாவின் மனித உரிமைக்கான(OHCHR)  உயர் ஆணையர் மைக்கேல் பக்லேட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் குடியுரிமை சட்டதிர்த்தத்திற்கு எதிரான போராட்டத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக கவலை கொள்வதகாவும் அனைத்துதரப்பினரும் வன்முறையை தவிர்க்கவேண்டுமெனவும்  ஐநாவின் மனித உரிமைக்கான உயர் ஆணைய அலுவலகமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து ஐநாவின் மனித  உரிமைக்கான ஆணையர் பக்லேட் அவரது செய்தித் தொடர்பாளர் மூலமாக வெளியிட்ட செய்தியறிக்கையின் சாரம்  கீழ்வருமாறு

  • குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் கவனமாகவும் சர்வதேச மனித உரிமைகளை பாதுகாப்பதன் பொருட்டு  ஏற்புடைய முறையில்  பரிசீலனை செய்யும்  என நம்புகிறோம்
  • ஆப்கானிஸ்தான்,வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் புலம் பெயர்ந்த ஆறு மதத்தை சார்ந்த மக்களை குடிமகன்களாக அங்கீகரிக்கின்ற  சட்டத் திருத்தம்,அதே பாதுகாப்பை இஸ்லாமியர்களுக்கு மட்டும் மறுத்துள்ளது.
  • சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உறுதியளிக்கின்ற இந்திய அரசமைப்பு சட்டத்தை இச்சட்டத் திருத்தம் மீறுகிறது.மேலும் இன,நிற,மத அடிப்படையிலான பாகுபடுத்தலை  தடுக்கிற  சர்வதேச  சிவில் மற்றும் அரசியல்  உரிமை மாநாடு மற்றும்   ‘இனப் பாகுபடுத்தலை தடை செய்கிற  மாநாடு’ ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு  இந்தியா இருக்கும் என்ற உறுதியை குடியுரிமை சட்டத் திருத்தம் மீறுகிறது.
  • தற்போது மேற்கொண்டுள்ள சட்டத்திருத்தம், பாகுப்பாட்டை கொண்டிருப்பதால் குடியுரிமையை மக்கள் பெறுவதற்கு  பாதிப்பாகிறது.
  • அகதிகளின் தகுதிநிலைகளை  ஆராயாமல் அனைத்து  அகதிகளையும் மனித உரிமையின் பொருட்டு மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும்.
  • பாதிப்பான சூழலில் அகதிகளை மனித உரிமையின் பேரில் நடத்தவேண்டும். தடுப்பு முகாமில்  அடைப்பதையோ கூட்டாக வெளியேற்றுவதையோ தவிர்க்க வேண்டும் என அகதிகள் தொடர்பாக ஓராண்டுக்கு முன்பாக நடைபெற்ற அகதிகளுக்கான பாதுகாப்பு, ஒழுங்குமுறை தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் இந்திய உறுதியளித்ததை இங்கு நினைவு படுத்துகிறோம்.
  • துன்புறுத்தலுக்கு உள்ளான மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தை  வரவேற்கிறோம். அதேநேரம்,ஒரு ஆரோக்கியமான  தேசிய புகலிட அமைப்பின்  மூலம் அதை செய்ய வேண்டும். இன, மத பாகுப்படுத்தல் இல்லாமல் சமத்துவத்தின் அடிப்படையில் நிறைவேற்றப் படவேண்டும்.

ஆதாரம்:

https://thewire.in/rights/united-nations-high-commissioner-for-human-rights-cab

ஆங்கிலம் வழி தமிழில்-அருண் நெடுஞ்செழியன்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW