வைகைக்_கரை_வாழ்_மதுரை_மக்களே!  மதச்சார்பற்ற சனநாயக ஆற்றல்களே! காவிமயச் செயல்பாட்டுக்கு எதிராக அணிதிரள்வோம்!

26 Jul 2019

அனைத்து மதங்கள் சார்ந்த மக்களுக்குப் பொதுவான அனைத்து இயற்கை வளங்களையும் காவிமயமாக்கும் இழிசெயலை நாடு முழுவதும் ஆர்.எஸ் எஸ். சங்பரிவார் அமைப்புகள் செய்து வருகின்றன. அகில பாரத துறவியர் சங்கம் எனும் சங்பரிவார் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ். நபர் தலைமையில் இயங்கும் வைகை நதி மக்கள் இயக்கம் இணைந்து நடத்தி வருகின்றனர்.

 

நெல்லையில் தாமிரபரணி புஷ்கரணம் எனப் புரளி கிளப்பிய காவி பயங்கரவாத சங்பரிவார் கும்பல் தற்போது ‘வைகைப் பெருவிழா ‘ எனும் பெயரில் வைகைக் கரையில் ஆரப்பாளையம் புட்டுத் தோப்பில் 24 முதல் ஆக 4 வரை தொடர்ந்து 12 நாட்கள் மாநாடுகள் நடத்தி வருகின்றனர். கேப்ரன் ஹால் பெண்கள் பள்ளி, வெள்ளி வீதியார் அரசுப் பள்ளி, கிறித்தவர்களின் தேவாலயம் உள்ளிட்ட முக்கியமான பகுதி. இந்நிகழ்வுகளில் வடநாட்டு அகோரிகள் உள்ளிட்டோரை வரவழைக்கும் கலவரமூட்டும் செயலில் ஈடுபடவுள்ளனர். ஆன்மீகத்தின் பெயரால் நடைபெறும் இச்செயல்பாடுகள் இந்துத்துவக் காவி பயங்கரவாத அரசியல் செயல்பாடாகும். அமைச்சர்களோ, அதிகாரிகளோ இந் நிகழ்வுகளில் கலந்து கொள்வது அரசுப் பணியாளர் சட்ட விதிப்படி தவறாகும்.

12 நாட்கள் நடைபெறும் இத்தொடர் செயல்பாடுகளுக்கு மதுரை மாநகர் காவல்துறை அனுமதி கொடுத்தது பொறுப்பற்ற செயலாகும். அனைத்து மத மக்களும் இணக்கமாக வாழும் மதுரையில் இது போன்ற மதவெறி அரசியல் செயல்பாடுகளை அனுமதிப்பது மக்களின் அமைதி வாழ்க்கையைச் சீரழிக்கும் செயலுக்குத் துணை போகும் செயலாகும். மக்கள் பிரச்சனைகளுக்குப் போராடும் மக்கள் இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கும் மதுரை மாநகர் காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு அனுமதி அளிப்பது மக்கள் விரோதச் செயலாகும்.

 

இறுதி நாளான ஆக 4 அன்று வைகைக்கரை – பட்டறைக்காரத் தெரு சந்திப்பில் ‘வைகை மாதா’ எனும் பெயரில் சிலை ஒன்றை வைக்கப் போவதாக அறிய வருகிறோம். இது தடுக்கப்பட வேண்டிய செயல் என தமிழக அரசை, காலல்துறையை, பொதுப்பணித் துறையை, மதுரை மாவட்ட ஆட்சியரை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். போட்டியாக இது போன்ற சிலை வைப்பு நிகழ்வுகள் நடக்கப் போவதாகக் கேள்விப்படுகிறோம். இஸ்லாமிய மக்கள் கணிசமாக வாழும் பகுதியாகும். வைகைக் கரையின் எந்த இடத்திலும் புதியதாக எந்தச் சிலையும் அமைக்க அனுதிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்தை, மதுரை மாநகர், மாவட்ட காவல்துறையை, பொதுப்பணித் துறையைக் கேட்டுக் கொள்கிறோம்.

 

மதுரை வாழ் மக்களே, மதச்சார்பற்ற சனநாயக இயக்கங்களின் தோழர்களே!

பக்தியும், வழிபாடும் பொது அமைதியைக் கெடுக்கும் அரசியல் செயல்பாடாக மாறக்கூடாது. மதுரையை, வைகையைக் காப்போம். லட்சக்கணக்கில் அனைத்து சமூக மக்களும் வைகையில் கூடும் சித்திரைத் திருவிழா நகரத்தின் கொண்டாட்டத்தை, மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்போம்!

 

 

தோழமையுடன்,

மீ. த. பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி.

ஒருங்கிணைப்பாளர், காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

பேச : 9443184051

21.07.2019

#savevaigaifromRSS

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW