சூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்! எமது செவ்வணக்கம்!
சென்னை மாதவரம் பகுதியிலிருந்து கிளம்பிய புரட்சிகர அரசியல் பயணம் சென்னைத் தொழிலாளர்கள் மத்தியில், செங்குன்றம், காரனோடை என விரிந்து கடலூர் – பன்ருட்டி, நெய்வேலி எனத் தோழமையை நிறுவியது. மார்க்சிய – லெனினிய இயக்க விடுதலை அமைப்பில் 2007 வரை உள் முரண்பாடுகளோடு
இயங்கினார். 2007 இறுதியில் இ.க.க (மா-லெ) மக்கள் விடுதலை அமைப்பை தோழர்களுடன் ஒன்றுபட்டு உருவாக்கி உடன் நின்றார். 2010இல் திருவெற்றியூரில் மாநாடு கண்டோம்.
2012 இறுதியில் இ.க.க (மா-லெ) மக்கள் விடுதலை மற்றும் தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி இடையே
ஐக்கியத்தை கண்டோம். 2014 திருவெற்றியூர் முதல் ஒற்றுமை மாநாடு மூலம் ஒன்றுபட்ட கட்சியான
கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு நிறுவினோம் . இந்தப் பயணம் தோழர் அண்ணாதுரை பங்களிப்பில்லாமல் சாத்தியப்பட்டிருக்காது. புரட்சிகர அமைப்புகளின் ஒற்றுமை, ஐக்கியம் இவைகளின் உயிர்ச் சொல் தோழர் அண்ணாதுரை.
2016 சூன் 20 அர்ப்பணிப்பு மிக்க தோழர் அண்ணாதுரை மறைவு ஐக்கிய மனோபாவத்தின் மறைவாகியது. இன்று அவரது நினைவுகளே மிச்சம். வர்க்கப் போராட்டம், சாதி ஒழிப்பு, தேசிய இன உரிமை இம்மூன்று கருத்தியலே தோழர் அண்ணாதுரையுடன் பயணித்ததில் வந்தடைந்தது.
- குழுவாதம், சந்தர்ப்பவாதம், தாராளவாதம் எதிர்த்து தமிழ்நாட்டிற்கான புரட்சிகரக் கட்சியைக் கட்டமைக்க நம்மைத் தயார் செய்வோம்!
- காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் போராட்டடங்களைக் கட்டி எழுப்புவோம்! சாதி ஒழிந்த, சமதர்மத் தமிழ்த்தேசக் குடியரசு படைக்கச் சபதமேற்போம்! காவி பயங்கரவாத எதிர்ப்பு – மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு – சமத்துவம், இயற்கை வளச் சூறையாடல் – சுயசார்பு போராடும் சக்திகளைக் கொண்ட மக்கள் முன்னணியைக் கட்டி எழுப்புவோம்!
தோழர் அண்ணாதுரை நினைவைப் போற்றுவோம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன்,
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051