தூத்துக்குடி தேர்தல் – காவல்துறையின் அராஜகத்தை வன்மையாக கண்டிப்போம் !

04 Apr 2019

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் போட்டியிடும் தோழர் மை. அண்டோ ஹிலாரி
தேர்தல் களப்பணி அலுவலக வாயிலிலிருந்த விளம்பரப் பலகையை முன்னறிவிப்பின்றி 04-04-2019 இன்று காலை அறுத்து எடுத்துச் சென்றிருக்கிறது அதிகார வர்க்கம். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் படங்கள் போடப்பட்டு வீரவணக்கம் என வாசகங்கள் இருந்தது. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகுமாம்.

சிப்காட் காவல்துறை சார்பு ஆய்வாளர் நம்பிராஜ் எங்களுக்குத் தெரியாது, தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்திருப்பார்கள் என்கிறார். தேர்தல் பார்வையாளர் சீமா ஜெயின் அவர்களைத் தொடர்பு கொண்ட போது விசாரித்துவிட்டு, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அறுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்திலும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கில்லையா?

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்குத் தெரியாமல், முன்னறிவிப்பில்லாமல் அறுத்துச் செல்வது எந்த வகை சனநாயகம்? ஆயிரம் விபரங்களைக் கேட்கும் தேர்தல் ஆணையம் கடிதம் கொடுக்காமல் அறுத்துச் செல்லும் சர்வாதிகாரச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேர்தல் காலக்கட்டத்திலும் கருத்துரிமை, சனநாயக உரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கண்டிக்க வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் இயங்கும் சனநாயக சக்திகள் தேர்தல் ஆணையச் செயல்பாடுகள் வேதாந்தா ஆதரவாக உள்ளதை அறிந்து கண்டிப்பதுடன், தோழமையுடன் தூத்துக்குடியில் போராடும் சக்திகளுக்கு தோள் கொடுக்க அழைக்கிறோம்!

தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW