‘மக்களுக்கான மாற்று அரசியல் களம் (Platform for People’s Alternative Politics (PPAP) சார்பில் சென்னையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு

‘மக்களுக்கான மாற்று அரசியல் களம் Platform for People’s Alternative Politics (PPAP) சார்பில் சென்னையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு 09/02/2019 அன்று நடைபெற்றது.
மக்கள் அரசியலைப் பலப்படுத்தும் வகையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை மதுரை, சென்னை, சேலம், திருச்சி என மண்டலவாரியாக, பல்வேறு மக்கள் அமைப்புகள் பங்கேற்ற கூட்டங்களில் கருத்துக் கேட்டுத் தயாரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு மக்கள் பிரிவினரின் தீர்க்கப்படாத கோரிக்கைககளை முன்னிறுத்தி, ‘காவி – கார்ப்பரேட்’ சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம், விகிதாச்சாரத் தேர்தல் முறையைக் கொண்டு வரக் குரலெழுப்புவோம், சனநாயத்தை வலுப்படுத்த மக்களை அதிகாரப்படுத்துவோம் எனும் முழக்கங்களை முன்னிறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிக்கை விளக்கக் கூட்டங்கள் நடத்துவது என முடிவானது.
ஒருங்கிணைப்பாளர் திரு சி.சே.இராசன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திருமிகு. ரோகினி (சமுக ஆர்வலர், திரைப்படக் கலைஞர்) அவர்கள் அறிக்கையை வெளியிட, சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார். தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், வழக்கறிஞர் கென்னடி, சுய ஆட்சி இந்தியா அமைப்பின் செயலாளர் திருமிகு கிறிஸ்டினா, மாநிலத் தலைவர் திரு பாலகிருஷ்ணன், பேராசிரியர் ஆனந்த், மே3 இயக்க ஒருங்கிணைப்பாளர் தீபக், மீனவப் பெண்கள் அமைப்பின் தலைவர் இருதயமேரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அறிக்கை பதிவிறக்கம் செய்யவும் (DONWLOAD) : maatru arasiyal
– மக்கள் முன்னணி ஊடகம் செய்தி