சனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்!
-காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்!
தமிழகத்தில் அண்மை காலமாக பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன.துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம், மின்சாரவாரியத் தொழிலாளர்கள் போராட்டம், ஓரகடத்தில் MSI, ராயல் என்பீல்ட், யமஹா ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் எனப் பல்வேறு தொழிலாளர் பாதுகாப்பு கோரிக்கைகளுக்காக ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த காலங்களில் மூலதன முதலைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு இடையே நடைபெற்ற வர்க்கப் போராட்டத்தின் விளைவாக, பாட்டாளி வர்க்கம் போராடிப் பெற்ற பல அரசியல், பொருளியல் உரிமைகளை காங்கிரசை விஞ்சுகிற வகையில் தற்போதைய பாசக மோடி அரசு பறித்து வருகிறது. இந்திய அரசியல் சாசனம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள குறைந்தபட்ச தொழிலாளர் நல சட்டப் பாதுகாப்பை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக தொழிலாளர் நலச் சட்டங்களில் முதலாளிகளுக்கு ஆதரவான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. ஒப்பந்த கால வேலைவாய்ப்பு (Fixed Term Employment – FTE), பயிற்சியாளர் ஊக்குவிப்பு (NEEM) போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும் 1948 தொழிற்சாலை சட்டம், அப்ரண்டீஸ் சட்டம் 1961, 1988 சட்டங்களை ஏற்கனவே மக்கள்அவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்துவிட்டது. இதுபோக, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்திலும் அபாயகரமான மாற்றங்களை மேற்கொண்டுவருகிறது.
இந்த பின்னனியில், தொழிலாளர் மீதான தொடர் ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாளர் தரப்பிலான நலனை நிலைநாட்டிக் கொள்வதற்கும் உறுதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் நாடுதழுவிய தொழிலாளர் போராட்ட இயக்கத்திற்கான கோரிக்கைகளை தற்போது வலுவாகவும், தொடர்ச்சியாகவும் வலியிறுத்தவேண்டியுள்ளது.
இச்சூழலில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மையத் தொழிற்சங்கங்கள் சனவரி 8,9 இல் நடத்தும் இரு நாள் பொது வேலை நிறுத்தத்தை சோசலிச தொழிற்சங்க மையம் ஆதிரக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளையும் பிற உழைக்கும் மக்களது உரிமைகளையும் வென்றெடுக்கும் நீண்ட நெடிய போராட்டத்தின் பகுதியான இந்த இருநாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும்! காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்!
சதீஸ்
பொதுச்செயலாளர், சோசலிச தொழிற்சங்க மையம்
9940963131