கஜா பேரிடர் – மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் !
இன்று (20-12-2018) மதியம் சுமார் 1 மணியிலிருந்து திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைபூண்டி மற்றும் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த மாரிநகரி, வடக்கு நாணலூர், களப்பால், ரெகுநாதபுரம், செந்தாமரைக்கண், இளநகர், எழிலூர், கள்ளிக்குடி, வெங்காத்தான்குடி, பண்டார ஓடை, ஆட்டூர் சமத்துவபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயல் பாதித்த நிலையில் வீடிழந்து, வாழ்வாதாரங்கள் இல்லாமல் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்க கூடியவர்களிடம் சுய உதவிக் குழுக்கள் வழிக் கடன் கொடுத்த எல் & டி, எக்விடாஸ், லோக் கிராமவிடியல், விடிவெள்ளி , முத்தூட் பைன்னான்ஸ், எஸ் பேங்க் போன்ற நுண்கடன் நிறுவனங்கள் தினமும் மக்களை மிரட்டி வருகின்றனர். வட்டித் தவணையை செலுத்தாவிட்டால் வழக்குப் போடுவோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரம் பழைய நிலைக்கு வரும்வரை பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
1. மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
2. வீடு இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை ரூ. 4100 லிருந்து ரூ 10,000 உயர்த்திக்கொடு.
3. நிவாரண கணக்கெடுப்பில் விடுபட்ட பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை மீண்டும் கணக்கிலெடுத்து நிவாரணம் வழங்கிடு
4. அரசால் வழங்கப்பட்டுள்ள 27 வகையான நிவாரண உதவிப் பொருட்களை உடனடியாக வழங்கிடு
5. மேற்கண்ட மைக்ரோபின் – நுண்கடன் நிறுவனங்கள் கந்துவட்டி போல் வட்டிவிகிதம் 25% மேல் வசூலிப்பதை தடைசெய்து.
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து உறுதியான பதில் வராத நிலையில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒருங்கிணைப்பு:
அருண்சோரி, தஞ்சை மாவட்ட செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
7299999168
7299999168