தூத்துக்குடி_போராளி_அக்ரி_பரமசிவம்_காவல்துறை_விசாரணை_மிரட்டல்

22 Aug 2018

சமூகப் போராளி அக்ரி பரமசிவம் இன்று 22-08-2018 அதிகாலை வீட்டிலிருந்து தூத்துக்குடி, புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கவோ, தூண்டவோ மாட்டேன் என எழுதி வாங்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.

இன்று காலை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் வீட்டிற்குச் சென்று அழைத்த முரப்பநாடு காவல்துறை, அக்ரி பரமசிவனை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற புதுக்கோட்டை காவல்துறை எனத் தமிழக அரசின் தூத்துக்குடி காவல்துறை மிரட்டல் பணி மீண்டும் ஒரு சுற்று தொடங்கியுள்ளது. தொடர்கிறது.

ஆலையை மீண்டும் திறக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சியிலுள்ள சூழலில் இந்த மிரட்டல் வேலைகள் யாருக்காக?
1996 மே துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர்,
2018 துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் எனப் பலி கொடுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கப் போகிறோமா?

தூத்துக்குடி மக்களுக்கு, போராளிகளுக்கு
துணை நிற்போம்!
காவல்துறை மிரட்டலைக் கண்டிப்போம்!

தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 9443184051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW