கம்யூனிஸ்ட் போராளி கோவிலாங்குளம் தோழர் தவசியாண்டி அவர்களின் 3வது ஆண்டு வீரவணைக்கப் பொதுக்கூட்டம் – மதுரை கருமாத்தூரில் நடைபெற்றது.
#மதுரை_மாவட்டம்_கருமாத்தூர்_09_07_2018_
கம்யூனிஸ்ட் போராளி கோவிலாங்குளம் தோழர் தவசியாண்டி ( மறைவு 08-07-2016) மூன்றாவது ஆண்டு நினைவு நாள்
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான மக்கள் அதிகாரம் தோழர் ஆரியபட்டி செயராமன் உள்ளிட்ட 14 தோழர்களுக்கு வீரவணக்கக் கூட்டமாக நடந்தது. அடக்குமுறைக்கு எதிரான சனநாயகக் குரலாக நடைபெற்ற கூட்டத்திற்கு சாதி ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் தெய்வம்மாள் தலைமை வகித்தார். மறைந்த தோழர் தவசியாண்டி துணைவியார் சிவகாமி உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர்
தோழர் மீ.த.பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் தோழர் செயக்குமார்,
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) மாவட்டச் செயலாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி,
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு நிர்வாகி தோழர் ஜோதி,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்டக்குழுத் தோழர்கள் இரா.பிரகாசம், மு.தங்கப்பாண்டி, எஸ்.பாண்டி ஆகியோர் உரையாற்றினர்.
தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பில் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.