தோழர் பெ.மணியரசன் மீது தாக்குதல்!

11 Jun 2018
  • தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!

தஞ்சையில் நேற்று 10-06-2018 தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இருசக்கரத்தில் பின்னமர்ந்து வரும் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ளார். தமிழ்நாட்டில் பொதுநிகழ்வுகளில் காவிபயங்கரவாத சக்திகள் நேரடியாக தகராறுகளில் ஈடுபடுவதும், தங்களை விமர்சனம் செய்வோரை தாக்குவதும் தொடர் செயலாகி வருகிறது. எடப்பாடி அரசின் காவல்துறை மோடி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதும் வெளிப்படையாகத் தெரிகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இதற்கு ஒரு உதாரணம். கோவையில் புதியதலைமுறை தொலைக்காட்சி விவாத அரங்கில் திரைப்பட இயக்குனர் அமீர் தாக்குதலை எதிர்கொள்ள நேர்ந்ததும் தமிழகத்தில் சனநாயகச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. தோழர் பெ.மணியரசன் மீதான தாக்குதலும் இதே போன்றதொரு செயலாகத்தான் பார்க்க முடிகிறது. பொதுவாழ்க்கையில் நீண்டகாலம் இயங்கும் தோழர்களுக்கே இந்த நிலை என்பது கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளின் பின்னணியை காவல்துறை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என தமிழ்த்தேச மக்கள் முன்னணி கேட்டுக் கொள்கிறது. காவிபயங்கரவாதிகள், சாதிய சக்திகளின் இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW