சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கச்சநத்தத்தில் நடந்த கண்மூடித்தனமான இப்படுகொலைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

30 May 2018

சாதி, மதம் கடந்து போராடிய மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு 13 பேருக்கு மேல் படுகொலையால் தூத்துக்குடியின் துயரங்களிலிருந்து விடுபடுமுன் சாதியின் வன்மத்தால் படுகொலை! இப்படி எளிதாக வீடுபுகுந்து எந்தச்சாதிக்காரனை வெட்டிச் சாய்க்கிறான். இந்த மனோநிலை சாதிவெறியும் இணையாமல் என்ன வகை பொருளாதார முரண்பாடு. கொல்பவன் தனிமனித பாதிப்பில், கஞ்சா வியாபாரி என எதுவாக இருந்தாலும் கொல்லப்படும் கூட்டம் அருந்ததியர், பறையர், மள்ளராக மட்டுமே தொடர்கிறதே! முக்குலத்தோர், ஆண்ட பரம்பரை, பெரும்பான்மை எனும் பெயரால் தென்மாவட்டங்களில் இன்னும் தொடர்கிற சாதி மேலாண்மைத்தனம் துடைத்து ஒழிக்கப்பட வேண்டும்.

தமிழக அரசே!

படுகொலையில் ஈடுபட்ட அகமுடையார் சாதிவெறி & கஞ்சா வியாபார சமூக விரோதக் கும்பலை உடனடியாகக் கைது செய்! சாதிவெறித்தனத்துக்கு துணை போகும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு!

எஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வலியுறுத்து!

உழைக்கும் தமிழர்களே! சமூகவிரோதிகள் எந்தச் சாதிக்காரனாக இருந்தாலும் சமூக விரோதிகளே! சாதியின் பெயரால் சமூகவிரோதிகளுக்குத் துணை போகாதீர்கள்!

மீ.த.பாண்டியன், தலைவர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி Thamiznation’s people’s Front பேச: 9443184051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW