இரத யாத்திரை தமிழகத்தில் அனுமதியோம்! – காவல்துறை டி.ஜி.பி யுடன் தலைவர்கள் சந்திப்பு
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அயோத்தியில் தொடங்கி மார்ச் 20 அன்று தமிழ்நாட்டில் நுழையும் “ இராம்ராஜ்ஜிய இரத யாத்திரை” யை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி இன்று தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குனர் இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. பின்னர் டி.ஜி.பி. அலுவலக வாயிலில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. தமிழ்நாடு அரசின் காவல்துறை தடுக்க வேண்டும்.
மார்ச் 20 அன்று தமிழ்நாட்டு எல்லையான செங்கோட்டையில் இரத யாத்திரை தடுப்பு மறியல் நடைபெறும், ஆயிரக் கணக்கில் பங்கேற்க உள்ளனர் என்பதை தலைவர்கள் அறிவித்தனர்.
பங்கேற்றோர்:
தோழர் தி.வேல்முருகன், தலைவர் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தோழர் பேரா ஜவாஹிருல்லா, தலைவர் – மனிதனேய மக்கள் கட்சி,
தோழர் தகடூர் தமிழ்ச்செல்வன், தலைமை நிலையச் செயலாளர் – விடுதலைச் சிறுத்தைகள்,
தோழர் முகமது ஷேக் அன்சாரி, துணைத்தலைவர் – பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா
தோழர் பாலன், பொதுச் செயலாளர் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி
தோழர் வேழவேந்தன், சென்னை மாவட்டத் தலைவர் – திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் – இளந்தமிழகம்
தோழர் லெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகள் மீதான பார்ப்பனீய – மதவெறிப் பாசிசத் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக, மதக் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் வரும் இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துவோம்!
#மார்ச்_20_செங்கோட்டை_நோக்கி_அணிதிரள்வோம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், ஒருங்கிணைப்பாளர்,
காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு -தமிழ்நாடு